இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள், 2024 ஆம் ஆண்டு மத்திய வங்கி மதிப்பீட்டுத் தரவரிசையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 'A+' தரத்தைப் பெற்றுள்ளார்.
குளோபல் ஃபைனான்ஸ் இதழில் 2024 ஆம் ஆண்டிற்கான ‘இந்தியாவின் சிறந்த வங்கி’ ஆக பாரத் ஸ்டேட் வங்கியானது (SBI) அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியக் கடற்படையானது, சமீபத்தில் ஓமன் கடலில் நடைபெற்ற ஈரானியக் கடற்படையுடனான ஒரு கூட்டுக் கடற்படைப் பயிற்சியை மற்ற நாடுகளுடன் சேர்ந்து நிறைவு செய்துள்ளது.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் கட்டமைக்கப்பட உள்ள உலகின் மிகப்பெரியக் கட்டமைப்பான கன சதுர வடிவிலான முகாப் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
அசாமின் புகழ்பெற்ற வளங்காப்பு அறிவியலாளரான குமார் தாலுக்தாருக்கு IUCN அமைப்பின் இனங்களின் உயிர் பிழைத்தல் ஆணையத்தின் (SSC) பாதுகாப்புத் தலைமைத்துவத்திற்கான 'தி ஹாரி மெஷ்ஷெல் விருது' வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மின்னணு விளையாட்டு சாம்பியன்ஷிப் என்று பெயரிடப்பட்ட முதல் சர்வதேச மின்னணு விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியினை இந்தியா நடத்த உள்ளது.
காத்மாண்டு ஜாஸ் திருவிழா என்றும் அழைக்கப்படுகின்ற அதன் 20வது நிகழ்வானது காத்மாண்டு பள்ளத்தாக்குப் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
17வது நகர்ப்புறப் போக்குவரத்து இந்தியா மாநாடு & கண்காட்சியானது (2024) குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புவனேஸ்வருக்கு 'சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்புகள் கொண்ட நகரம்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.