சுமார் 700 என்ற அபாயகரமானக் காற்றுத் தரக் குறியீட்டுடன் (AQI) லாகூர் நகரானது மீண்டும் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது.
வாக் பக்ரி தேயிலைக் குழுமம் ஆனது, ஹுருன் இந்தியா நிறுவனத்தின் "இந்தியப் பொருளாதாரத்தில் சிறந்தப் பங்களிப்பினை ஆற்றியதற்கான தலைமுறை மரபு விருதை" பெற்றுள்ளது.
மத்திய அரசானது, இந்தியத் தொலைபேசி எண்களாகக் குறிப்பிடப்பட்டு வரும் சர்வதேச அழைப்புகளை அடையாளம் கண்டு தடுக்கும் 'சர்வதேச மோசடி அழைப்புகளைத் தடுக்கும் அமைப்பினை' அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேசத் தகவல் தொடர்பு ஒன்றியத்தின் (ITU) 15வது Kaleidoscope Academic Conference எனும் மாநாடானது, "நிலையான உலகிற்கான புத்தாக்க மற்றும் எண்ணிம மாற்றம்" என்ற கருத்துருவின் கீழ் புது டெல்லியில் நடைபெற்றது.