அயோத்தி தனது தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது, சரயு நதிக் கரையில் சுமார் 25 லட்சத்திற்கும் மிக அதிகமான எண்ணெய் (தீப) விளக்குகளை ஏற்றி, ஏறத்தாழ 1,121 பங்கேற்பாளர்களுடன் மிகப்பெரிய ஒரு வெகுஜன ஆரத்தி நிகழ்வினை நடத்தியதன் மூலம் இரண்டு கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளது.
இரயில்வே பாதுகாப்புப் படை (RPF), அதன் துணிச்சல் மிகு வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் வீர தீர எண்ணிம இணையதள நினைவிடத்தினைத் திறந்து வைத்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் துர்கேஷ் ஆரண்ய விலங்கியல் பூங்காவானது, நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்பிற்காக இந்தியப் பசுமைக் கட்டிடச் சபையின் (IGBC) சான்றிதழைப் பெறும் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாக மாற உள்ளது.
இராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆந்தி என்ற கிராமம் ஆனது பசுமைத் தொழில்நுட்பத் திட்டங்களின் உதவியுடன் எந்தவிதக் கழிவுகளும் இல்லாத மாதிரி மாநிலமாகத் தன்னை மாற்றியுள்ளது.
இந்தியக் கடற்படையின் கடற்படைப் புத்தாக்கம் மற்றும் உள்நாட்டுமயமாக்கல் அமைப்பின் (NIIO) மூன்றாவது கருத்தரங்கான ஸ்வவ்லம்பன் (Swavlamban) என்பது புது டெல்லியில் நடைபெற்றது.
இந்தியாவில் நீரிழிவு நோயின் பரவலை மதிப்பிடுவதற்காக என்று இத்தகைய 'முதல் வகையான' 'ICMR-India Diabetes 'INDIAB' எனப்படும் உலகின் மிகப்பெரிய ஒரு ஆய்வின் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆனது (MoHUA), 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 28 முதல் நவம்பர் 03 ஆம் தேதி வரை “ஸ்வச் தீபாவளி சுப் தீபாவளி” பிரச்சாரத்தினை மேற்கொண்டது.
தூய்மை பாரதம் என்ற திட்டத்தின் குறிக்கோள்களான தூய்மை மற்றும் நிலைத் தன்மையுடன் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தினை ஒருங்கிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.