TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 5 , 2024 68 days 107 0
  • ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தில் (UPI), 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 45% ஆண்டாண்டு அதிகரிப்புடன் 23.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 16.58 பில்லியன் பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளது.
  • சர்வதேச மித வறண்ட வெப்பமண்டலப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICRISAT) தலைமை இயக்குநர் பதவியில் இருந்து விலகும் டாக்டர் ஜாக்குலின் டிஅரோஸ் ஹூஜேஷ், உலக வேளாண் மன்றத்தின் (WAF) தலைமைச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்திய இராணுவம் மற்றும் அமெரிக்க இராணுவ சிறப்புப் படைகளுக்கு இடையேயான வஜ்ர பிரஹார் எனப்படும் 15வது கூட்டு இராணுவப் பயிற்சியானது (2024) அமெரிக்காவில் நடத்தப் பட்டது.
  • ஜகார்த்தாவில் நடைபெறும் இந்தியா-இந்தோனேசியா இடையிலான கருட சக்தி-24 எனப்படும் 9வது கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியில் இந்திய இராணுவம் மற்றும் இந்தோனேசியா இராணுவம் ஆகியவை பங்கேற்கின்றன.
  • 'இணையவெளிப் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கானத் தேசிய அளவிலான ஒரு தூதராக' நடிகை ராஷ்மிகா மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியக் கடலோரக் காவல்படையானது (ICG) 60% உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சில கூறுகளுடன் கூடிய 'அதம்யா' மற்றும் 'அக்சர்’ எனப்படும் இரண்டு விரைவு ரோந்துக் கப்பல்களை (FPVs) ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை (314) வீழ்த்திய ஐந்தாவது வீரர் என்ற பெருமையினை இரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார்·

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்