கோயம்புத்தூரில் விளாங்குறிச்சியில் எல்காட் தகவல் தொழில்நுட்ப வளாகத்தினை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
தமிழக அரசின் முன்னாள் உள்துறை செயலாளரும், இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், முதல் மாநிலத் தேர்தல் ஆணையராக இருந்தவருமான K.மலைச் சாமி சமீபத்தில் காலமானார்.
விண்வெளியில் மரப் பொருட்களின் பெரும் பயன்பாட்டிற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக மரத்தினால் உருவாக்கப்பட்ட உலகத்தின் முதல் செயற்கைக்கோள் ஆன லிக்னோசாட் ஜப்பானிய அறிவியலாளர்களால் விண்ணில் ஏவப்பட்டது.
கேமன் தீவுகளில் நடைபெற்ற உலகக் குத்துச்சண்டை கூட்டமைப்பின் சூப்பர் ஃபெதர் வெயிட் உலகப் போட்டியில் இந்திய வீரர் மந்தீப் ஜங்ரா வெற்றி பெற்றுள்ளார்.
ராயல் புருனே ஏர்லைன்ஸ் நிறுவனமானது, 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு புருனே-சென்னை-புருனே வழித் தடத்தில் நேரடி விமான சேவையைத் தொடங்கி உள்ளது.
இந்தியாவிற்கான விமானச் சேவையின் ஒரே நிறுத்தமாக சென்னை விளங்கும்.
பயனுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டப் பிரிவினைச் சேர்ந்தவர்கள், மானியக் கடன்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை இயங்கலையில் அணுகுவதற்கு உதவும் வகையில், ‘PM-SURAKSHA இணைய தளம்’ மற்றும் ‘PM-DAKSH இணைய தளம்’ ஆகியவற்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசானது, திரிபுரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமப் புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 ஆம் ஆண்டின் 15வது நிதிக்குழு ஆணைய மானியத்தின் முதலாவது தவணையையும், மிசோரம் மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாவது தவணையையும் வழங்கியுள்ளது.
போர் மற்றும் கடும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழல் வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் ஆனது ஆண்டுதோறும் நவம்பர் 06 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.