TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 10 , 2024 19 days 79 0
  • 2024 ஆம் ஆண்டிற்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பணியாற்றிய தமிழறிஞர் மா செல்வராசன் பெற உள்ளார்.
  • இந்திய-பூடான் எல்லையில் அசாம் மாநிலத்தின் தமுல்பூர் மாவட்டத்தில் உள்ள நிலம் சார் துறைமுகமான தர்ரங்காவில் அமைக்கப்பட்டுள்ள குடியேற்றப் பரிசோதனைச் சாவடியானது (ICP) சமீபத்தில் திறக்கப்பட்டது.
  • ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆனது, விளையாட்டுத் துறை விருதுகளை மறுசீரமைப்பதற்காக வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தியான் சந்த் விருதிற்குப் பதிலாக வாழ்நாள் சாதனையாளர்களுக்கான அர்ஜுனா விருதினை மாற்றியுள்ளது.
  • 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளியை இந்தியா அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளது.
  • தெலுங்கானா மாநில அரசானது, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சமூகங்களின் சமூக, பொருளாதார, கல்வி, மற்றும் அரசியல் நிலைமைகள் பற்றிய பல தரவுகளை மதிப்பிடுவதற்காக என்று மாநிலம் தழுவிய சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தொடங்கி உள்ளது.
  • பேராசிரியர் ஸ்ரீராம் சௌலியா ‘Friends – India’s Closest Strategic Partners’ என்ற தனது புத்தகத்தினைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
  • சீனாவின் ஜிங்ஷான் என்னுமிடத்தில் நடைபெற்ற உலக சாப்ட் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவின் தனுஸ்ரீ பாண்டே வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்