2024 ஆம் ஆண்டிற்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பணியாற்றிய தமிழறிஞர் மா செல்வராசன் பெற உள்ளார்.
இந்திய-பூடான் எல்லையில் அசாம் மாநிலத்தின் தமுல்பூர் மாவட்டத்தில் உள்ள நிலம் சார் துறைமுகமான தர்ரங்காவில் அமைக்கப்பட்டுள்ள குடியேற்றப் பரிசோதனைச் சாவடியானது (ICP) சமீபத்தில் திறக்கப்பட்டது.
ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆனது, விளையாட்டுத் துறை விருதுகளை மறுசீரமைப்பதற்காக வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தியான் சந்த் விருதிற்குப் பதிலாக வாழ்நாள் சாதனையாளர்களுக்கான அர்ஜுனா விருதினை மாற்றியுள்ளது.
2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளியை இந்தியா அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளது.
தெலுங்கானா மாநில அரசானது, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சமூகங்களின் சமூக, பொருளாதார, கல்வி, மற்றும் அரசியல் நிலைமைகள் பற்றிய பல தரவுகளை மதிப்பிடுவதற்காக என்று மாநிலம் தழுவிய சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தொடங்கி உள்ளது.
பேராசிரியர் ஸ்ரீராம் சௌலியா ‘Friends – India’s Closest Strategic Partners’ என்ற தனது புத்தகத்தினைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
சீனாவின் ஜிங்ஷான் என்னுமிடத்தில் நடைபெற்ற உலக சாப்ட் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவின் தனுஸ்ரீ பாண்டே வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார்.