இந்தியாவில் பிறந்த பெண் ஆராய்ச்சி அறிஞரான வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் 2018ஆம் ஆண்டிற்கான பால் பாரன் இளம் அறிஞர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தென் கொரியாவின் சங்வோனில், நடைபெற்ற 52வது சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேஷன் சாம்பியன்ஷிப்பில் இளம் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் குர்னிகால் சிங் கர்ச்சா வெண்லப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான ஜுலன் கோஸ்சுவாமி சர்வதேச விளையாட்டுகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதலாவது பந்து வீச்சாளர் ஆவார்.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே உத்தி சார்ந்த பங்களிப்பை ஊக்கப்படுத்துவதற்காக இந்திய-ஐக்கிய அரபு நாடுகள் கூட்டாண்மை மாநாடு துபாயில் நடைபெறவிருக்கிறது (IUPS - India - UAE Partnership Summit).
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமானது உலகிலேயே தனது பெரிய கைபேசி விற்பனைக் கூடத்தை பெங்களுருவில் திறந்துள்ளது. இதற்குமுன் அந்நிறுவனம் நொய்டாவில் உலகின் மிகப்பெரிய கைபேசி தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கியது.
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் இந்தியத் தொல்லியல் ஆய்வகமானது (ASI - Archaeological Survey of India) கிர்கி பள்ளி வாசல் வளாகத்தில் (தில்லி) 254 செம்பு நாணயங்களைக் கண்டுபிடித்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வு அமைச்சகமானது 328 கலப்பு மருந்துகளை (fixed Dose Combination) விற்பனை செய்வதற்காக அல்லது மனிதப் பயன்பாட்டிற்காக தயாரிப்பதைத் தடை செய்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இது 6 கலப்பு மருந்துகளை சில நிபந்தனைகளுக்குட்பட்டு விற்பனை அல்லது பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படுவதை கட்டுப்படுத்துகிறது.
சென்னை பெருநகரமானது நகரில் கூடுதலாக 8 மண்டலங்களில் கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கு முன் அடையார், கோடம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் உருவாகும் கழிவுகள் தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்படுகின்றன.
மின்னணு நிக்கோடின் வழங்கல் அமைப்புகள் (ENDS - Electronic Nicotine delivery Systems) அல்லது மின்னணு சிகரெட்டுகளை தயாரித்தல், விற்பனை செய்தல், வழங்குதல், வர்த்தகம் செய்தல், இறக்குமதி மற்றும் வைத்திருத்தலை தடை செய்து தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நல வாழ்வுத் துறையானது அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முதலாவது ஏவுகணை கண்காணிப்பு கப்பலான விசி 11184 ஐ கடல் சோதனையில் ஈடுபடுத்த இந்துஸ்தான் கப்பல்கட்டும் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது இந்தியாவின் இந்த வகையைச் சேர்ந்த முதலாவது கண்காணிப்பு கப்பலாகும்.
ஆந்திரப் பிரதேச மாநில அரசானது (மின்னணு - ரைத்து) என்ற கைபேசி தளத்தைத் தொடங்கியுள்ளது (தெலுங்கில் மின்னணு - விவசாயி). இது சிறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்ததை நியாயமான விலையில் விற்பனை செய்ய உதவுகிறது.
அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வர் பீமா காந்து அம்மாநிலத்தின் முதலாவது சைனிக் (இராணுவ) பள்ளியை நிக்லோக்கில் தொடங்கி வைத்தார். இந்தப் பள்ளி 60 மாணவர்களுடன் இந்த ஆண்டு ஆகஸ்ட் 27 தேதி முதல் செயல்படத் தொடங்கியது.
இது இளைஞர்கள் ஆயுதப் படையில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளிக்கிறது.
அலிபாபா நிறுவனரான ஜேக் பா தனது ஓய்வை அறிவித்துள்ளார். மேலும் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 முதல் டேனியல் ஜாங் அந்நிறுவனத்தின் தலைவராக பதவியேற்பார் என்று அவர் அறிவித்துள்ளார்.
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘மார்பத்’ திருவிழாவானது மகாராஷ்டிராவின் நாக்பூரில் கொண்டாடப்பட்டது.
குஜராத் மாநில அரசு ‘மிஷன் வித்யா’வை மீண்டும் தொடங்கியுள்ளது. இது ஒரு மாத காலத்திற்கு வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத்தில் பின்தங்கியுள்ள ஆறு முதல் எட்டு வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு அவற்றை கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
கோவா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது கடலோர பகுதிகளில் இடர்பாடுகளிலுள்ள பெண்களுக்காக உலகளாவிய உதவியளிக்கும் சேவை எண்ணை (181) தொடங்கியுள்ளது.
மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவழி பேராசிரியரான அருள் சின்னய்யனுக்கு அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் ‘சிறந்த ஆராய்ச்சியாளர் விருதை’ வழங்கியுள்ளது.