TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 17 , 2024 5 days 58 0
  • மணப்பாறை சிப்காட் தொழிற்துறைப் பூங்காவில் (திருச்சி மாவட்டம்) உற்பத்தியைத் தொடங்கிய முதல் நிறுவனமாக ரினோ ஸ்கேஃப் இண்டஸ்ட்ரி பிரைவேட் லிட் என்ற நிறுவனம் மாறியுள்ளது.
  • 16வது இந்திய இயங்கலை வழியிலான விளையாட்டு வசதி உருவாக்க வல்லுநர்கள் மாநாடானது (IGDC) ஐதராபாத்தில் நடைபெற்றது.
  • இந்தியாவின் தேசியப் புத்தக அறக்கட்டளை (NBT) ஆனது, 43 வது ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் (SIBF) கையால் எழுதப் பட்டுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் கையெழுத்துப் பிரதியின் பெரும் மதிப்புமிக்கப் பிரதியைக் காட்சிப் படுத்தியது.
  • இந்தியக் கடற்படையானது, 11,098 கிலோ மீட்டர் கடற்கரை மற்றும் 2.4 மில்லியன் சதுர கிலோ மீட்டர் அளவிலான பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் ‘சீ விஜில்-24’ எனப்படும் நான்காவது கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியினை நடத்த உள்ளது.
  • ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆனது, நவீன கால அடிமைத்தனத்தைத் தடுப்பதற்காகவும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் என்று கிறிஸ் இவான்ஸ் என்பவரை  நாட்டின் முதல் அடிமைத்தன எதிர்ப்பு ஆணையரை நியமித்துள்ளது.
  • ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய இரு விமான நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு ஆனது சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்யப்பட்டது.
    • புதிதாக ஒன்றிணைக்கப்பட்ட இந்த நிறுவனமானது தற்போது 208 விமானங்களின் சேவையுடன் சுமார் 90க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களை இணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்