TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 21 , 2024 6 hrs 0 min 16 0
  • நிதித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையுடன் ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தரவு மையத்தை ஒருங்கிணைக்கச் செய்வதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
  • காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் 76வது தேசிய சைக்கிள் ஓட்டப் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
  • சென்னை-திருச்சி வழித் தடத்தில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) / அழுத்தப் பட்ட இயற்கை எரிவாயு (CNG) மூலம் இயங்கும் சில பேருந்துகளை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பாரத் ஸ்டேட் வங்கி (SBI) ஆனது, 1.25 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பெற திட்டமிட்டுள்ள நிலையில், இது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் நிதித் துறையில் பெறப் பட்ட மிகப்பெரிய டாலர் மதிப்பிலான கடனாக இருக்கும்.
  • லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டுச் சபை (LAHDC) ஆனது, ஆதித்யா மேத்தா அறக் கட்டளை (AMF) உடன் இணைந்து உலகின் முதல் உயரமான இடத்திலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு மையத்தை நிறுவியுள்ளது.
  • CSIR-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி கல்வி நிறுவனம் மற்றும் குருகிராம் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து குருகிராம் பல்கலைக் கழகத்தில் பாரம்பரிய அறிவின் தொடர்பு மற்றும் பரவல் (CDTK-2024) பற்றிய சர்வதேச மாநாட்டை நடத்தின.
  • புது டெல்லியில் நடைபெற்ற முதலாவது போடோலாந்து மஹோத்சவத்தினை பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஆனது முதன்முறையாக சபரிமலை பக்தர்களின் யாத்திரைக்காக என உள்ளூர் வானிலை முன்னறிவிப்பு அமைப்பினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • உள்ளூர்வாசிகளின் உடல்நலம் மற்றும் நலன்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தூத்துக்குடி ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற வேதாந்தாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
    • 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக வேதாந்தா மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்