14வது இளையோர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஒடிசா அணியானது, இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஹரியானா அணியினை வீழ்த்தி தனது முதல் தங்கப் பதக்கத்தினை வென்றது.
பெங்களூருவில் BIMSTEC ஆற்றல் மையத்தினை அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
சத்தீஸ்கரில் உள்ள குரு காசிதாஸ்-தாமோர் பிங்லா இந்தியாவின் 56வது புலிகள் வளங் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையம் (NTCA) ஆனது, நுகு வனவிலங்குச் சரணாலயத்தினை பந்திப்பூர் புலிகள் வளங்காப்பகத்தின் மைய மற்றும் முக்கியப் பகுதியாக அறிவிக்கப் பரிந்துரைத்துள்ளது.
ஒடிசாவின் டெப்ரிகர்ஹ் வனவிலங்கு சரணாலயத்தில் நடத்தப்பட்ட முதல் விலங்குகள் கணக்கெடுப்பில், அங்கு குறைந்தது 659 இந்தியக் காட்டெருமைகள் இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.
நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு நிலை (AMR) பற்றிய 4வது அமைச்சரக உயர்மட்ட உலகளாவிய மாநாடு ஆனது சவூதி அரேபியா பேரரசின் ஜெட்டா என்னுமிடத்தில் நடைபெற்றது.
ஐக்கியப் பேரரசில் உள்ள QS அமைப்பின் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அஷ்வின் பெர்னாண்டஸ், 'Modialogue: Conversations for a Viksit Bharat' என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.
சர்வதேச ஆண்கள் தினம் ஆனது ஆண்டுதோறும் நவம்பர் 19 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த ரேச்சல் குப்தா, 2024 ஆம் ஆண்டிற்கான முதல் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் பட்டத்தினை வென்ற முதல் இந்தியர் ஆவார்.
இவர் இந்தப் புகழ்பெற்றப் பட்டத்தை வென்ற மூன்றாவது ஆசிய நாட்டவர் ஆவார்.