ஏர் இந்தியா நிறுவனமானது, பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) CAR 21 அங்கீகாரமாக நிர்ணயிக்கப்பட்ட வடிவமைப்பு அமைப்பு ஒப்புதலை (DAO) பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டு உலக மண் மாநாடு ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
அஞ்சல் துறையானது அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் ஒழிப்பு - 2047 குறித்த நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி ‘Waves’ எனப்படும் தனது சொந்த இணையவழி ஒளிபரப்பு (OTT) தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
புனேவைச் சேர்ந்த ஷிவாங்கி தேசாய், 2024 ஆம் ஆண்டு மிஸ் சார்ம் இந்தியா பட்டத்தை வென்றுள்ளதோடு மேலும் வியட்நாமில் நடைபெற உள்ள 2024 ஆம் ஆண்டு மிஸ் சார்ம் போட்டியில் இந்தியா சார்பான போட்டியாளராகப் பங்கேற்க உள்ளார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணியானது, சீன அணியினை வீழ்த்தி, மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் வெற்றிப் பெற்றது.
GAIL (இந்தியா) லிமிடெட் நிறுவனம் ஆனது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த நிதி மாற்றத்திற்கான 2024 ஆம் ஆண்டு SAP ACE விருதை வென்றுள்ளது.