TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 27 , 2024 26 days 80 0
  • பொது தொலைத்தொடர்பு சேவை வழங்கீட்டு நிறுவனமான BSNL ஆனது நாட்டின் முதல் நேரடி செயற்கைக் கோள் – கைபேசி இணையதளச் சேவையை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • தகவல் பரிமாற்ற சமிக்ஞை கோபுரப் பாகங்கள் மற்றும் பசுமையக அறைகள் போன்றவற்றிற்கு செலுத்தப்படும் வரிகளுக்கான பற்று வரவினைப் பெறுவதற்கான கோரல்களை உச்ச நீதிமன்ற விதி உறுதிப்படுத்தியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பட்டியலிடப்பட்ட செயலி அடிப்படையிலான உணவு விநியோக நிறுவனமான சோமாட்டோ, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி முதல் மும்பை பங்குச் சந்தையின் (BSE) சென்செக்ஸ் தர வரிசையில் JSW ஸ்டீல் நிறுவனத்திற்குப் பதிலாக இடம் பெற உள்ளது.
  • 130 ஆண்டு கால வரலாற்றில், இந்தியா முதல் முறையாக சர்வதேசக் கூட்டுறவு கூட்டணியின் (ICA) மாநாட்டினை நடத்த உள்ளது.
  • இந்திய இராணுவம் ஆனது, குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் பலதரப்பு வருடாந்திர கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியது.
  • முதலாவது ‘சாகர்மந்தன் – பெருங்கடல்’ என்ற பேச்சுவார்த்தையானது புது டெல்லியில் நடத்தப் பட்டது.
  • இந்தியாவின் இணையவெளிப் பாதுகாப்பு திறன்களைத் மேம்படுத்துவதற்காக என்று தேசியப் பாதுகாப்பு சபை செயலகம் மற்றும் இராஷ்ட்ரிய இரக்சா பல்கலைக்கழகம் ஆகியவற்றினால் பாரத் தேசிய இணையவெளிப் பாதுகாப்பு பயிற்சி (பாரத் NCX 2024) ஆனது ஏற்பாடு செய்யப்பட்டது.
  • நாகாலாந்தின் 25வது இருவாட்சிப் பறவைத் திருவிழாவிற்கான ஒரு பங்குதார நாடாக வேல்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக பெருவும்  அறிவிக்கப் பட்டு உள்ளது.
  • ஆர்மேனியா நாடானது சர்வதேச சூரியசக்திக் கூட்டணியின் 104வது முழுமையான ஒரு  உறுப்பினராக மாறியுள்ளது.
  • இந்தியச் சிறுபான்மைச் சமூகங்களின் உறுப்பினர்களால் தொடங்கப்பட்ட ஓர் அமெரிக்க அரசு சாரா நிறுவனமானது, இந்தியப் பிரதமருக்கு ‘டாக்டர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கான உலக அமைதி விருதினை (நேரில் வாரா நிலையில்) வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்