TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 28 , 2024 25 days 73 0
  • அரியானாவின் சோனிபட் நகரில் உள்ள OP ஜிண்டால் உலகப் பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
  • மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, தண்ணீரில் காணப்படும் பீனால் அல்லது பென்சீன் போன்ற தீங்கு விளைவிக்கும் மாசுக்களைத் துல்லியமாக கண்டறிவதற்காக ஒரு மலிவு விலையிலான மற்றும் கையடக்கமான (எளிதில் எடுத்து செல்லக் கூடிய) AroTrack எனப்படும் சாதனத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அரசியல் சாராத பின்னணியில் உள்ள இளையோர்களை அரசியலுடன் இணைக்கச் செய்வதற்காக என்று 2025 ஆம் ஆண்டு விக்சித் பாரத் இளம் தலைவர்கள் பேச்சு வார்த்தையானது புது டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
  • உத்தரப் பிரதேச மாநில அரசு ஆனது, லக்னோவில் உள்ள குக்ரைல் வனப்பகுதியில் இந்தியாவின் முதல் இரவு நேர சுற்றுப் பயண பூங்கா என்ற வசதியினை உருவாக்கி வருகிறது.
  • 11வது ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் பிளஸ் (ADMM-Plus) ஆனது லாவோ மக்கள் குடியரசின் வியான்டியானே நகரில் கூட்டப்பட்டது.
  • இந்தியச் சூரியசக்திக் கூட்டணிக் கழகம் (SECI) ஆனது, சந்தை வழிமுறைகள் குறித்த தகவல் பரிமாற்றத்தினை மேம்படுத்துவதற்கும் பசுமை ஹைட்ரஜனில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் வேண்டி H2Global நிறுவனத்துடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தில் குவாலியர் நகரானது, அதிநவீன அழுத்தப்பட்ட உயிரி-எரிவாயு ஆலையுடன் கூடிய, இந்தியாவின் முதல் தன்னிறைவான கோசாலையினை தொடங்கி உள்ளது.
  • இந்திய நிலக்கரி லிமிடெட் நிறுவனமானது, மதிப்புமிக்கப் பசுமை உலக சுற்றுச்சூழல் விருது மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்புப் பிரிவில் பசுமை உலகத் தூதர் என்ற மதிப்பு மிக்கப் பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா மற்றும் கரீபியன் சமூக அமைப்பு (CARICOM) இடையேயான உச்சி மாநாடு ஆனது கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்றது.
  • இந்தியாவின் அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் Sea Vigil 24 எனப்படும் நான்காவது நாடு தழுவியக் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியானது நடத்தப்பட்டது.
  • ஆப்பிரிக்காவின் மேம்பாட்டில் தொழில்மயமாக்கலின் மாபெரும் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக என்று ஆண்டுதோறும் நவம்பர் 20 ஆம் தேதியன்று ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தினம் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்