TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 29 , 2024 24 days 63 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையானது, மனித திறன் மேம்பாட்டினை முக்கிய மையமாகக் கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தினை (CHAI) சமீபத்தில் தொடங்கியது.
  • சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனமானது, 2024 முதல் 2031 ஆம் ஆண்டு வரையிலான அனைத்து ஆசிய கிரிக்கெட் வாரிய போட்டிகளுக்கான பிரத்யேக ஊடக உரிமைகளைப் பெற்றுள்ளது.
  • ஜார்க்கண்ட் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, அங்கு ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
  • பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஆனது, பசுமை இல்ல வாயு உமிழ்வு கணக்கியல் நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக கார்பன் கணக்கீட்டு நிதியியலுக்கான (PCAF) உலகளாவிய அங்கீகாரம் பெற்ற கூட்டாண்மையில் கையெழுத்திட்டுள்ளது.
  • பீகாரைச் சேர்ந்த பதின்மூன்று வயதான வைபவ் சூர்யவன்ஷி, IPL ஏலத்தில் இதுவரை ஏலம் விடப்பட்ட இளம் வீரர் என்ற பெருமையினை பெற்றுள்ளார்.
    • இராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது அவரை 1.10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து உள்ளது.
  • தேசிய முந்திரி தினம் ஆனது ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
  • முகலாயப் பேரரசுக்கு எதிராக அசாம் பகுதியினை நன்கு ஆதரித்து காத்த லச்சித் போர்புகான்  அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 24 ஆம் தேதியன்று (2024) லச்சித் திவாஸ் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்