தமிழ்நாடு மாநில அரசானது பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம் ஆனது, தற்போதுள்ள வடிவில் மாநிலத்தில் செயல்படுத்தப்பட மாட்டாது என்றும், அதை மாற்றியமைக்க வலியுறுத்தியும் மத்திய அரசிடம் கருத்து தெரிவித்துள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக நவம்பர் 26 ஆம் தேதியன்று ‘சம்விதான் திவாஸ்’ கொண்டாடப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒரு கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்த நிகழ்வின் போது, சமஸ்கிருதம் மற்றும் மைதிலி ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் மொழிபெயர்ப்புப் பதிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
இந்தியாவில் நாளமில்லா சுரப்பி மண்டல அறுவைச் சிகிச்சையின் தந்தை என்று கருதப் படும் சிவபாதம் விட்டல் சமீபத்தில் காலமானார்.
இவர் தமிழ்நாடு அறிவியலாளர் விருது மற்றும் டாக்டர் B.M. சுந்தரவதனம் சிறந்த ஆசிரியர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில், கருவயிற்று மண்கொத்தி என அழைக்கப் படும் டன்லின் (கேரளாவில் காணப் படும்) என்ற ஒரு சிறிய கடற்கரைப் பறவையின் பாதுகாப்பு நிலையானது, 2023 ஆம் ஆண்டில் இருந்த தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்ற நிலையிலிருந்து 2024 ஆம் ஆண்டில் அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 29 ஆம் தேதியன்று, பிரிவினைத் திட்டத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அல்லது ஓர் அரபு நாடு மற்றும் ஒரு யூத அரசை நிறுவுவதற்கான 181 (II) தீர்மானத்தினை நினைவு கூரும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.