அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் ‘உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு – 2019 க்கான முதலீட்டு ஊக்குவிப்பு பிரச்சாரத்தை தமிழ்நாடு அரசாங்கம் தொடங்கியது.
இதற்குமுன் தமிழ்நாடு அரசு 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பின் முதலாவது பதிப்பை நடத்தியது.
ஜார்க்கண்ட் மாநில அரசானது அலுவலகப் பயன்பாட்டிற்காக மின் வாகனங்களை அறிமுகப்படுத்தியது. அரசாங்கப் பயன்பாட்டிற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை கொள்முதல் செய்யும் இந்தியாவின் ஐந்தாவது மாநிலமாகவும், கிழக்கிந்தியாவின் முதலாவது மாநிலமாகவும் ஜார்க்கண்ட் உருவெடுத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் அறிமுகப்படுத்துவதற்கு முன், அலுவலகப் பயன்பாட்டிற்காக மின் ஊர்திகளை தில்லி, மஹாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் கொள்முதல் செய்துள்ளன.
பஞ்சாப் மாநில சட்டசபையானது பஞ்சாப் நில மேம்பாட்டு திட்டங்கள் (ஹரியானா திருத்தம்) மசோதா, 2018-ஐ நிறைவேற்றியது. இதன் நோக்கமானது விவசாயிகளின் நீர்ப்பாசன பயன்பாட்டிற்காக மற்ற விவசாயிகளின் நிலங்களுக்கு அடியில் குழாய் பதிப்பை ஏற்படுத்துவதாகும்.
குன்மிங் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கிடையே புல்லட் இரயில் சேவையை தொடங்க சீனா முடிவு செய்துள்ளது. இந்த புல்லட் இரயிலானது அண்டை நாடுகளான மியான்மர் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகள் வழியே செல்லும்.
ஆசியான் உலக பொருளாதார மன்றமானது “ஆசியான் 4.0: தொழில்முனைவு மற்றும் நான்காவது தொழில் புரட்சி” என்ற கருத்துருவுடன் வியட்நாமின் ஹனோயில் தொடங்கியது.
சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கான இந்திய சங்கமானது (IATO - Indian Association of Tour Operators) ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறையுடன் இணைந்து விசாகப்பட்டினத்தில் 34வது ஆண்டு மாநாட்டை நடத்தியது.
இம்மாநாட்டின் கருத்துருவானது, “குறிக்கோள்: 2022ல் 20 மில்லியன் சுற்றுலாப் பயணிகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” ஆகும்
நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் தொற்றா நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தலில் சிறப்பான பங்காற்றியதற்காக புகழ்பெற்ற ஐ.நா. நிறுவனங்களுக்கிடையேயான பணிக் குழு விருது (UNIATF - UN Interagency Task force) மனோஜ் ஜலானிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் சர்தார் சிங் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
லக்னோ நகராட்சியானது “குலே மீ சச் கீ காந்தி பஜாவோ - சீதி பஜாவோ” (திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு எதிராக தகவல் அளித்தல்) என்ற திறந்த வெளியில் மலம் கழிப்பதற்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) - கரக்பூர் ஆனது ஆராய்ச்சியில் கூட்டுமுயற்சி, திறன் கட்டமைப்பு மற்றும் இதர கல்விப் பங்களிப்புகளுக்கு உதவுவதற்காக கனடா கார்லீடோன் பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்கான துறையானது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையங்கள் மீதான தேசியக் கருத்தரங்கை புது தில்லியில் நடத்தியது.
மத்திய விவசாய மற்றும் விவசாயி நலன் அமைச்சர் பால் பதனிடுதல் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியைத் (DIDF - Dairy Processing and Infrastructure Development fund) தொடக்கி வைத்தார்.
நேபாள இராணுவம் சீனாவுடன் இரண்டாவது கூட்டுப் படைப் பயிற்சியான சாகர்மாதா தோழமை - 2 (Sagarmatha Friendship - 2) என்ற பயிற்சியில் கலந்து கொள்ளவிருக்கிறது.
சமீபத்தில் நேபாளம் பீம்ஸ்டெக் நாடுகளின் முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சியில் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.