அணு மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த அறிவியல்கள் நிறுவனமானது (INMAS - Institute of Nuclear Medicine and Allied Sciences) அணு ஆயுதப்போர் அல்லது கதிரியக்கக் கசிவின் விளைவாக ஏற்படும் காயங்கள் விரைவாக குணமடைவதற்காகவும் கடுமையான காயங்களிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் முதன் முதலாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியான மருத்துவ உபகரணங்கள் பெட்டகத்தை தயாரித்துள்ளது.
இந்தியாவின் உதய்வீர்சிங் தென் கொரியாவில் நடைபெற்ற ISSF உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான ஜூனியர் 25 மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஸ்பெயினின் மலகா நகரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் 102 வயது இந்திய தடகள வீரங்கனையான மான் கௌர், இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அவர் இதற்கு முன்பு நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் 20க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.
ராஜஸ்தான் சாகித்ய அகாதெமியானது, ஜெய்ப்பூரின் கதை எழுத்தாளர் சவாய் சிங் செகாவாத் அவர்களுக்கு இந்தி இலக்கியத்தில் அவரது பங்களிப்பிற்காக, இந்த ஆண்டிற்கான மீரா புரஷ்கார் விருதை அறிவித்துள்ளது.
அர்ஜென்டினாவில் உள்ள மார்டெல் பல்டா என்ற இடத்தில் G20 வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தச் சந்திப்பானது, சர்வதேச வர்த்தகத்தில் தற்போதைய வளர்ச்சிகளைப் பற்றியும் உலகப் பொருளாதாரத்தில் அதன் தாக்கங்களைப் பற்றியும் விவாதிப்பதற்கான வாய்ப்பை வழங்கும்.
மத்திய புள்ளியியல் அலுவலகத்தால் வெளியிடப்படுகின்ற தொழிலக உற்பத்தி குறியீட்டைப் பொறுத்த வரையில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியானது ஜூலை மாதத்தில் 6% சதவிகிதமாக உயர்ந்தது.
பகிரப்பட்ட டிஜிட்டல் தரவுகளைக் கொண்ட பேரேடு தொழில்நுட்பத்தில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழுவானது ஒப்புதல் வழங்கியுள்ளது. இது பிரிக்ஸ் வங்கிகளுக்கிடையேயான கூட்டுறவு முறையின் கீழ் உள்ள ஒரு கூட்டுறவு முன் முயற்சியாகும்.
ஹைதராபாத்தின் இராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையமானது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, ஒரு வருடத்தில் 5-15 மில்லியன் பயணிகள் என்ற பிரிவில், விமான நிலையங்கள் கழகத்தின் சர்வதேச விமான நிலைய சேவைக்கான தரத்தின் (Airports Council International Airport Service Quality) உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்று விமான நிலைய விருதினைப் பெற்றது.
இராஜஸ்தான் வனத்துறை அமைச்சர் நாகர்கர் உயிரியல் பூங்காவில் மாநிலத்தின் முதல் சிங்கங்களைப் பார்வையிடும் வன உலாவினை தொடங்கி வைத்தார். இந்தப் பூங்காவானது ஆரவல்லி மலையடிவாரத்தில் தில்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இந்தியப் பிரதமர் 15 நாட்கள் நடைபெறக்கூடிய மிகப்பெரிய நாடு தழுவிய ‘ஸ்வச்சதா ஹை பிரச்சாரம் 2018’ ஐ தொடங்கி வைத்தார்.
மத்திய அமைச்சரவைக் குழுவானது, இறக்குமதி செய்யப்படுகின்ற புதை படிம எரிபொருளைச் சார்ந்திருப்பதை குறைத்து இரயில்வேயின் வருவாயை சேமிக்கும் பொருட்டு, அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்திய இரயில்வேயை முழுவதுமாக மின்மயமாக்க ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான Space X ஆனது விண்வெளிக்கு மக்களை அனுப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய செலுத்து வாகனமான பிக் பால்கான் ராக்கெட்டை கொண்டு நிலவைச் சுற்றி சுற்றுலாத் தளத்தை தொடங்குவதற்கான புதியதொரு திட்டத்தை அறிவித்துள்ளது.
கடலிலிருந்து கரைக்கு சூறாவளியாக வந்த வெப்ப மண்டலப் புயலான ஃபுளோரன்ஸ் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் மிகப்பெரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை மையமாகக் கொண்ட குரோனோஸ் இன்கார்பொரேடெட் என்ற பன்னாட்டுத் தொழிலாளர் மேலாண்மை நிறுவனத்தால் நடத்தப்பட்ட பண்பாட்டு ஆய்வுக் கணக்கெடுப்பின் படி உலகின் கடுமையாக உழைக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
மெக்சிக்கோ அதில் இரண்டாவது இடத்தில் உள்ளது அதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளது. ஐக்கிய இராஜ்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தரவரிசையில் கீழே உள்ள நாடுகளாகும்.