TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 1 , 2024 22 days 88 0
  • சர்வதேச கூட்டுறவுக் கூட்டணியின் முதல் உலகளாவிய மாநாடு ஆனது புது டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
  • Beyond the Higgs Boson: The W Boson and Dr. Ashutosh Kotwal's Quest for the Unknown“ எனப்படும் புத்தகம், மானிக் கோட்வால் என்பவரால் எழுதப் பட்டு, ஜெர்ரி பின்டோ என்பவரால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற நரசாபுரம் சரிகை கைவினைப்பொருள் ஆனது, மதிப்பு மிக்க புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
  • தொழிலதிபரும் எஸ்ஸார் குழுமத்தின் தலைவருமான சஷிகாந்த் ரூயா காலமானார்.
  • அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ப்ரோஜித் பிஹாரி முகர்ஜி, “Brown Skins, White Coats: Race Science in India, 1920–66” என்ற அவரது புத்தகத்திற்காக 2024 ஆம் ஆண்டு ஃபைசர் விருதினைப் பெற்றுள்ளார்.
  • இந்தியா தனது முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை லடாக்கின் லே எனுமிடத்தில் திறந்து வைத்துள்ளது.
  • ஹிண்டால்கோ நிறுவனமானது, டவ் ஜோன்ஸ் நிலைத் தன்மைக் குறியீட்டில் (DJSI) உலகின் மிகவும் நிலையான அலுமினிய உற்பத்தி நிறுவனமாகத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக (2020-2024) இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்