TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 4 , 2024 19 days 72 0
  • பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப் பால் பொருள் மாவு உற்பத்தி ஆலையானது அமைக்கப்பட உள்ளது.
  • மத்திய மின்சார ஆணையம் (CEA) ஆனது, நீர்ம இயக்கவியல் வகையின் கீழ் மேற் பரப்பு நீர்ம இயக்கவியல் சார்ந்த சுழலி (SHKT) என்ற தொழில்நுட்பத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
  • கலாச்சாரத் துறை அமைச்சகமானது, உத்கல் கேசரி டாக்டர் ஹரேக்ருஷ்னா மஹ்தாப் அவர்களின் 125வது பிறந்த நாளை நன்கு நினைவு கூரும் வகையிலான ஒரு நினைவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
  • மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பொறியாளரும் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் எதிர்கால விண்வெளி வீரருமான எமிலி காலண்ட்ரெல்லி, விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட 100வது பெண்மணி என்ற ஒரு வரலாற்றைப் படைத்துள்ளார்.
  • ஆஸ்திரேலியா அரசானது, இளையோர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மீதான ஒரு தடையினை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது.
    • இந்த மாதிரியிலானச் சட்டத்தினை இயற்றிய முதல் நாடு இதுவே ஆகும்.
  • 2025-2026 ஆம் காலக்கட்டத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி கட்டமைப்பு ஆணையத்திற்கு (PBC) இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது.
  • ஒரு இந்தியப் பொருளாதார வரலாற்றாசிரியரான அமியா குமார் பாக்சி சமீபத்தில் காலமானார்.
    • அவர் “Private Investment in India 1900-1939” என்ற புத்தகத்திற்காக புகழ் பெற்றவரவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்