TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 5 , 2024 18 days 74 0
  • 13வது தேசிய விதை மாநாடு (NSC-2024) ஆனது, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தினால் உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டாளர் வாரியத்தின் (BCCI) செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவராகப் பொறுப்பெற்றுள்ள நிலையில் இந்த உலகளாவிய அமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஏற்ற இளம் மற்றும் ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • உத்தி சார் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பொருளாதாரப் பாதுகாப்பு தொடர்பான இந்தியா-ஜப்பான் இடையிலான பேச்சுவார்த்தையின் முதல் சுற்று ஆனது சமீபத்தில் டோக்கியோ நகரில் நடைபெற்றது.
  • சிங்கப்பூர் இராணுவமும் இந்திய இராணுவமும் இணைந்து, 13வது அக்னி வாரியர் (XAW) - 2024 பயிற்சியினை இந்தியாவில் மகாராஷ்டிராவின் தேவ்லாலி எனுமிடத்தில் நடத்தியது.
  • குஜராத்தின் கைவினைக் கலைப் பொருளான 'கர்ச்சோலா' புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
  • ஃபிஜி, கொமரோஸ், மடகாஸ்கர் மற்றும் செய்ஷெல்ஸ் ஆகிய நாடுகளில் சூரிய மின்னாற்றல் உற்பத்தித் திட்டங்களை நிறுவுவதற்காக  2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிப்பதற்காக சர்வதேச சூரியசக்தி கூட்டணியுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்