TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 9 , 2024 13 days 87 0
  • மாமல்லபுரத்தில் உள்ள நந்தவனம் பாரம்பரியப் பூங்கா மற்றும் ஊட்டியில் உள்ள தேவாலா எனுமிடத்தில் அமைந்துள்ள மலர் தோட்டம் ஆகியவற்றை மேம்படுத்தச் செய்வதற்காக மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சகம் ஆனது, 169.9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • மகாராஷ்டிரா மாநிலதத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுள்ளார்.
  • அமெரிக்கா தனது வெளிநாட்டு இராணுவ உபகரண விற்பனைத் திட்டத்தின் கீழ் MH-60R பல் பயன்பாட்டு ஹெலிகாப்டர்களுக்கான பல ஆதரவு உபகரணங்களை இந்தியாவிற்கு விற்பதற்காக 1.17 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்திய ஆடவர் இளையோர் ஹாக்கி அணியானது, பாகிஸ்தான் அணியினைத் தோற்கடித்து தங்களது ஐந்தாவது இளையோர் ஆசிய கோப்பைப் பட்டத்தையும், (ஓமனில் நடைபெற்றது) தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தினையும் வென்றுள்ளது.
  • ஹரிமவு சக்தி 2024 எனப்படுகின்ற இந்தியா-மலேசியா இடையிலான நான்காவது கூட்டு இராணுவப் பயிற்சியானது மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
  • கழிவுகளிலிருந்து மதிப்புமிக்க பொருளை உருவாக்குதல் குறித்த 9வது சர்வதேச மாநாடு ஆனது இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பினால் (CII) புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு ஆசிய இணைய வழி விளையாட்டுப் போட்டிகளின் இணைய வழி கால்பந்து (eFootball) போட்டியில் இந்தியாவின் பவன் காம்பெல்லி வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.
  • இந்திய நாட்டின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை முழுமையாக அமல்படுத்திய இந்தியாவின் முதல் நகரமாக சண்டிகர் திகழ்கிறது.
  • எண்ணிமம் சார்ந்த கல்வியறிவினை வழங்கி கிராமப்புற இந்தியாவினை மிகவும் மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்சர்தா அபியான் (PMGDISHA) திட்டம் ஆனது, 6.39 கோடி நபர்களுக்குப் பயிற்சி அளித்து, 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் 6 கோடி பயனாளர்கள் என்ற அதன் இலக்கினைத் தாண்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்