14வது ஆசிய-ஓசியானியா வானிலை செயற்கைக்கோள் பயனர்கள் மாநாடு (AOMSUC-14) ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஆனது, உலக வங்கியுடன் இணைந்து புது டெல்லியில் இரண்டு நாட்கள் அளவிலான உலகளாவிய அங்கீகரிக்கப் பட்ட இந்தியப் பொருளாதார நிறுவனங்கள் (AEO) திட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சுற்றுச்சூழல் சார் சுற்றுலா மற்றும் மிகப்பெரும் பாரம்பரிய போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக வேண்டி, ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் உபெர் நிறுவனம் தனது ஷிகாரா (சிறிய படகுகள்) சேவைகளைத் தொடங்கியுள்ளது.
இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகள், எதிர்கால நுட்பம் சார்ந்த போர்க் கப்பல்களில் பயன்படுத்தப்படும் மின்சார உந்துவிசை அமைப்புகளை இணைந்து வடிவமைத்தல் மற்றும் இணைந்து உற்பத்தி செய்வதற்காக என்று ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் பெய்ஜிங் நகரில் மண்டலம் மற்றும் சாலை முன்னெடுப்பிற்கான (BRI) அமலாக்கக் கட்டமைப்பில் கையெழுத்திட்டுள்ளன.
GRIHA சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 16வது GRIHA உச்சி மாநாடு ஆனது "Accelerating Climate Action in the Built Environment" என்ற கருத்துருவில் புது டெல்லியில் நடைபெற்றது.
பீகார் மாநிலத்தில் உள்ள கலுகாட் எனுமிடத்தில் உள்ள இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தின் பல்பயன்பாட்டு இடைநிலை முனையம் (IMT) ஆனது GRIHA சபையின் ஐந்து நட்சத்திர SVAGRIHA மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
டெல்லி முதல்வர், ரோகினி எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய மாணாக்கர் படை (NCC) இல்லத்தில் நிலத்தடியில் உள்ள துப்பாக்கி சுடுதல் பயிற்சித் தளத்தைத் திறந்து வைத்துள்ளார்.
சுமார் 4000 பேருக்கு மேலான இறுதிச் சடங்குகளைச் செய்த பூஜா ஷர்மா, 2024 ஆம் ஆண்டிற்கான BBC இதழின் உலகின் 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இந்தியாவில் இருந்து அருணா ராய் மற்றும் வினேஷ் போகட் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.