TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 11 , 2024 12 days 53 0
  • இந்தியாவின் முதல் பெரு நிறுவன மயமாக்கப்பட்ட ஒரு முக்கியத் துறைமுகமான காமராஜர் துறைமுகம் ஆனது (எண்ணூர்) சமீபத்தில் அதன் வெள்ளி விழாவினைக் கொண்டாடியது.
  • கேந்திரிய வித்யாலயா (KV) சங்கதன் ஆனது தேனியில் தனது முதல் பள்ளியை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்தியாவின் EPFO நிறுவனம் ​​ஆனது, நாட்டில் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளை சீர்திருத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான அதன் தொடர்ச்சியான பல்வேறு என்று முயற்சிகளுக்காக 2024 ஆம் ஆண்டு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான மதிப்பு மிக்க ISSA நல்ல நடைமுறை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கு இடையேயான குழுவின் 19வது அமர்வு ஆனது பராகுவே குடியரசில் நடைபெற்றது.
  • “வின்பாக்ஸ் 2024” எனப்படுகின்ற வியட்நாம்-இந்தியா இடையிலான 5வது இருதரப்பு இராணுவப் பயிற்சியானது ஹரியானா மாநிலம் அம்பாலா நகரில் நடைபெற்றது.
  • உலக வர்த்தக அமைப்பின் பொதுச் சபையானது, இரண்டாவது நான்கு ஆண்டு காலத்திற்கு, டாக்டர் என்கோசி ஒகோன்ஜோ-இவேலாவை மீண்டும் அதன் தலைமை இயக்குநராக நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
    • இதற்கு தலைமை தாங்கும் முதல் பெண்ணும் முதல் ஆப்பிரிக்க (நைஜீரியா) நாட்டவரும் இவரே ஆவார்.
  • BASIC எனும் கணினி நிரலாக்க மொழியின் இணை கண்டுபிடிப்பாளரான பேராசிரியர் தாமஸ் யூஜின் கர்ட்ஸ் சமீபத்தில் காலமானார்.
  • SBI வங்கியின் அட்டை வழங்கீட்டு நிறுவனம் ஆனது, புழக்கத்தில் உள்ள அதன் கடன் அட்டைகளின் எண்ணிக்கையானது 20 மில்லியனை விஞ்சியதாக அறிவித்துள்ளது.
    • 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், HDFC வங்கியானது 20 மில்லியன் அட்டைகள் என்ற மைல்கல்லை எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்