TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 13 , 2024 10 days 45 0
  • மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்கா நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக என்று ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசானது சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
  • மறைந்த தலைவரான மு. கருணாநிதி அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் ஆற்றிய முக்கிய உரைகளின் ஒரு தொகுப்பான ‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ என்ற புத்தகத்தினை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.
  • நீலகிரி வரையாடு திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, ஒவ்வொரு நீலகிரி வரையாடுகளுக்கும் ரேடியோ அலைபரப்பு கழுத்துப் பட்டை பொருத்தும் ஒரு திட்டத்தினை தமிழ்நாடு வனத்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
  • தமிழக முதல்வர் அவர்கள் கேரளாவில் உள்ள வைக்கத்திற்கு சென்று கேரள முதல்வருடன் வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டுப் பெரு விழாவில் கலந்து கொண்டார்.
    • அவரது இந்த கேரளப் பயணத்தின் போது, ​​‘பெரியார்’ ஈ.வெ. இராமசாமி அவர்களின் நினைவிடம் மற்றும் தமிழ்நாடு பொதுப்பணித்துறையினால் புதுப்பிக்கப்பட்ட நூலகம் ஆகியவற்றினை அவர் திறந்து வைத்தார்.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் மத்திய நன்னீர் வாழ் மீன்வளர்ப்பு நிறுவனமானது (ICAR-CIFA), பிரபலமான அலங்கார மீன் இனங்கள் பற்றிய பன்மொழித் தகவல்களை எட்டு இந்திய மொழிகளில் வழங்குகின்ற "ரங்கீன் மச்லி" என்ற செயலியை உருவாக்கியுள்ளது.
  • இண்டிகோ விமான சேவை நிறுவனத்திற்கு, மத்திய விமானப் போக்குவரத்து மையத்தின் (CAPA) 2024 ஆம்  ஆண்டு உலகளாவிய விமானப் போக்குவரத்தில் சிறந்து விளங்கும் நிறுவனகளுக்கான விருது விழாவில் '2024 ஆம் ஆண்டின் சிறந்த விமான நிறுவனம்' என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • 56 வயதான சஞ்சய் மல்ஹோத்ரா, இந்திய ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக மூன்று ஆண்டு காலத்திற்கு அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.
  • 19 வயதிற்குட்பட்டோருக்கான (U-19) 2024 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியினை வீழ்த்தி வங்காளதேச அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பட்டத்தை வென்றுள்ளது.
  • இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம் (HSL) ஆனது, 3வது பொதுத்துறை நிறுவனங்களுக்கான மாறுதல் விருது விழாவில் (PSU Transformation Awards 2024) இரண்டு மதிப்பு மிக்க விருதுகளை வென்றுள்ளது.
  • மைசூர் நகரத்தில் உள்ள இரண்டு பாரம்பரிய கட்டிடங்களை மறு சீரமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்தியத் தொல்லியல் துறை (ASI) மற்றும் யுனெஸ்கோவின் கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கான இந்தியத் தேசிய அறக்கட்டளை (INTACH) ஆகியோரையும் பிரதிவாதிகளாக உச்ச நீதிமன்றம் சேர்த்துள்ளது.
    • மைசூர் நகரில் உள்ள தேவராஜா சந்தைக் கட்டிடம் மற்றும் லான்ஸ் டவுன் கட்டிடத்தை மறுசீரமைக்க வேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்