TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 14 , 2024 8 days 78 0
  • தமிழ்நாடு சட்டமன்றம் ஆனது, தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் (HR&CE) உறுப்பினரை உள்ளடக்க முயலும் மசோதாவினை ஏற்றுக் கொண்டது.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, 410 மீட்டர் தொலைவிலான இந்தியாவின் முதல் அதிவிரைவு இரயில் போக்குவரத்தின் (Hyperloop) மீதான ஒரு சோதனை வழித் தடத்தினை நிறைவு செய்துள்ளது.
  • வடகிழக்கு இந்தியாவின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவதற்கான புதிய தளத்தினை வழங்குவதற்கான முதலாவது அஷ்டலட்சுமி மஹோத்சவ் நிகழ்வானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • மத்திய அமைச்சரவையானது, நாடு முழுவதும் 85 புதிய கேந்திரிய வித்யாலயாக்கள் (KV) மற்றும் 28 ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் (JNV) ஆகியவற்றினை நிறுவச் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • குஜராத் மாநில அரசானது, பௌத்த/புத்த பாரம்பரிய தளங்களைப் பாதுகாப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் தாய்லாந்து நாட்டில் உள்ள போதிகயா விஜ்ஜாலயா 980 என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • 4வது மீகாங் கங்கை தர்ம யாத்திரை என்ற நிகழ்வானது தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்றது.
  • ஐநா போதைப் பொருள் தடுப்பு ஆணையத்தின் (CND) 68வது அமர்வின் தலைமைப் பொறுப்பிற்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ICIMOD) ஆனது, காற்று மாசுபாடு குறித்த நிகழ்நேர மற்றும் முன்னறிவிக்கப்பட்ட தரவுகளை வழங்கும் பொதுப் பயன்பாட்டு தளமான காற்றுத் தரத் தரவுக் கட்டுப்பாட்டு தளத்தினை வெளியிட்டுள்ளது.
  • மெரியம்-வெப்ஸ்டர் என்ற அகராதியானது அதன் 2024 ஆம் ஆண்டின் சிறந்த சொல்லாக ‘Polarization’ என்பதனை அறிவித்துள்ளது.
  • KIIT சர்வதேச ஓபன் போட்டியின் கிளாசிக்கல் செஸ் போட்டியில் டெல்லியைச் சேர்ந்த ஆரித் கபில் (9) கிராண்ட்மாஸ்டரான ராசெட் ஜியாட்டினோவை தோற்கடித்ததன் மூலம், இந்த சாதனையை எட்டிய இளம் இந்தியர் மற்றும் உலகளவில் மூன்றாவது இளையவர் ஆனார்.
  • இந்தியாவின் முதல் கூகுள் பாதுகாப்பு பொறியியல் மையத்திற்கான (GSEC) தளமாக ஐதராபாத் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இதற்காக அமைக்கப்பட உள்ள இத்தகைய முதல் வகையிலான மற்றும் உலகளவில் 5வது மையமாகும்.
  • உலகத்தின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கச் செய்வதிலும் மனித நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் மலைப்பகுதிகளின் மதிப்பைப் பற்றியப் பெரும் விழிப்புணர்வினை அதிகரிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 11 ஆம் தேதியன்று சர்வதேச மலைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்