TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 18 , 2024 33 days 76 0
  • இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை நகர மற்றும் கற்றல் மையம் ஆனது, உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள சுத்னி கிராமத்தில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ளது.
  • சமீபத்தில் 16வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP16), நிலங்களின் வளங்காப்பு மற்றும் நிலையான வள மேலாண்மை ஆகியவற்றில் பழங்குடியின மக்களின் விலை மதிப்பு அற்றப் பங்களிப்பினை கவனத்தில் கொள்வதற்காக முதல் முறையாக பழங்குடியின மக்கள் மன்றம் நடைபெற்றது.
  • இந்தியக் கடற்படையானது மூத்தக் கடற்படை வீரர்கள், வீர் நாரிஸ் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக மகாராஷ்டிராவில் 4வது ‘SAMPARK’ என்ற பயிற்சியினைத் தொடங்கியுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள ஈகிள்னெஸ்ட் என்ற பறவை திருவிழாவின் புதிய முத்திரைச் சின்னத்தினை அருணாச்சலப் பிரதேச முதல்வர் வெளியிட்டுள்ளார்.
  • மத்திய அரசானது, பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பாரியோஜனாவின் கீழ் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திராக்களை (PMBJK) நடத்துவதற்கு முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களுக்கு (PACS) அதிகாரம் அளித்துள்ளது.
  • புது டெல்லியில் நடைபெற்ற நான்காவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டிற்கு பிரதமர் அவர்கள் தலைமை தாங்கினார்.
  • கீதா ஜெயந்தி எனும் நிகழ்வில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஆச்சாரியர்கள் இணைந்து 'ஸ்லோகங்கள்' வாசித்ததன் மூலம் போபால் (மத்தியப் பிரதேசம்) புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
  • புகழ்பெற்ற புரவலரும், எழுத்தாளருமான டாக்டர் தினேஷ் ஷஹ்ரா, 'Dalai Lama’s Secret to Happiness' என்ற தனது புத்தகத்தினை வெளியிட்டுள்ளார்.
  • "The Kumbaya Story" எனப்படும் இந்தியத் திரைப்படமானது மிகச் சிறப்பு மிக்க பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கலைகள் கழகத்தில் (BAFTA) நடைபெற்ற 13வது உலக நிலைத்தன்மை திரைப்பட விருது விழாவில் (GSFA) விருதினை வென்றுள்ளது.
  • இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையேயான இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (DTAA) மிகவும் ஒரு சாதகமான நிலையில் உள்ள நாடு என்ற தனது அந்தஸ்தினை (MFN) சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
  • சமீபத்தில் இரண்டாவது இந்தியா-ஈரான்-ஆர்மேனியா முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் புது டெல்லியில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்