TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 16 , 2018 2134 days 632 0
  • பாரத் எர்த் மூவர்ஸ் (BEML - Bharat Earth Movers Limited) நிறுவனமானது அண்மையில் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் சரக்கு லாரியை தனது மைசூர் ஆலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சிங்கரவுலியில் உள்ள நார்தர்ன் கோல் ஃபீல்ட்ஸ்  லிமிடெட்டில் (Northern Coalfields Limited) பயன்படுத்தப்படும்.
  • இந்திய அஞ்சல் பணவழங்கீடுகள் வங்கியானது (IPPB - India Post Payments Bank) ஒழுங்குபடுத்தப்படாத சில்லறை விற்பனையாளர்களுக்கான பணவழங்கீடு வலையமைப்பை உருவாக்க பணவழங்கீடு தொழில்நுட்ப நிறுவனமான நிதிநிலைக்குரிய மென்பொருள்கள் மற்றும் அமைப்புகள் (Financial Software and Systems- FSS) என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
  • 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 2 முதல் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் தனது புதிய பங்குகளை வழங்குதல்  அல்லது அனைத்து பங்குகளையும் மாற்றுதல் போன்றவற்றை டீமட் (அதாவது மின்னணு) முறையில் வழங்குவதை மத்திய பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகமானது கட்டாயமாக்கியுள்ளது.
  • மாஸ்கோவில் வர்த்தக, பொருளாதார, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் கலாச்சாரம் மீதான இந்திய-ரஷ்ய அரசாங்கத்திற்கு இடைப்பட்ட  ஆணையத்தின் (IRIGC-TEC/ India-Russia Inter-Governmental Commission on Trade, Economic, Scientific, Technological and Cultural Cooperation) 23-வது கூட்டம் நடைபெற்றது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்திய பிரதிநிதிக் குழுவிற்கு தலைமைத் தாங்கினார்.
    • IRIGC-TEC ஆனது ஆண்டுதோறும் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் ஒரு நிலையான அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்