TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 22 , 2024 8 hrs 0 min 15 0
  • 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆனது ஜனவரி 06 ஆம் தேதி வழக்கமான ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.
  • தமிழ்நாடு மாநிலத் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) ஆனது, மாநிலத்தில் உள்ள 17 SIPCOT தொழிற்துறைப் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்களை உருவாக்குவதற்காக வேண்டி சென்னையின் FICCI-FLO நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான தேவனுரா மகாதேவாவுக்கு தமிழக அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான மதிப்பு மிக்க வைக்கம் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொட்டப்பட்ட உயிரி மருத்துவ மற்றும் கலப்பு திடக்கழிவுகளை அகற்றுமாறு கேரள அரசு மற்றும் கேரள மாநிலக் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (KSPCB) தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) தெற்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
  • சென்னையைச் சேர்ந்த 19 வயதான இந்திய-அமெரிக்கரான கெய்ட்லின் சாண்ட்ரா நீல், 2024 ஆம் ஆண்டு இந்திய அமெரிக்க அழகிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளார்.
  • சீன டியாங்காங் விண்வெளி நிலையத்தின் இரண்டு விண்வெளி வீரர்களான காய் சூஷே மற்றும் சாங் லிங்டாங் ஆகியோர் ஒன்பது மணி நேர விண்வெளி  பயணத்தை நிறைவு செய்து புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளனர்.
  • 2024 ஆம் ஆண்டு மூத்தோர் நிலை தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முறையே கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களின் ஆடவர் மற்றும் மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளன.
    • சுமார் 50 ஆண்டுகளில் முதல் முறையாக கர்நாடகா அதன் முதல் ஆடவர் பட்டத்தைப் பெற்றுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி மதிப்பு ஆனது 20,000 கோடி ரூபாயைத் தாண்டியதையடுத்து, 2019 ஆம் ஆண்டில் 23வது இடத்தில் இருந்த இந்தியா, உலகளவில் 3வது பெரிய திறன்பேசி ஏற்றுமதியாளராக முன்னேறி உள்ளது.
  • முதலாவது இந்திய கடல்சார் பாரம்பரிய மாநாடு (IMHC 2024) எனப்படும் ஒரு முக்கிய நிகழ்வானது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகத்தினால் (MoPSW) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • பயோகான் குழுமத்தின் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா, இந்தியாவில் உயிரியியல் சார் பொருட்களின் உற்பத்தி இயக்கத்திற்கு முன்னோடியாக விளங்கியதற்காக இந்தியத் தர நிர்ணயச் சங்கத்தின் (ISQ) மதிப்புமிக்க ஜாம்செட்ஜி டாடா விருதை பெற்றுள்லார்.
  • கட்டுமானப் பணிகளின் போது செயல்படுத்தப்பட்ட மகத்தானப் பாதுகாப்பு நெறிமுறைகளை வெகுவாக அங்கீகரித்து அயோத்தியில் கட்டப்பட்ட இராமர் கோவிலுக்கு பிரிட்டிஷ் பாதுகாப்பு சபையின் 'கௌரவ வாள்' விருது வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்