நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் ஆனது, நாகப்பட்டினம் மற்றும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை ஆகியவற்றுக்கு இடையே 150-200 டன்கள் சுமந்து செல்லும் திறன் கொண்ட சிறிய சரக்குப் போக்குவரத்து கப்பல் சேவையைத் தொடங்க உள்ளது.
மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் 15 புதினங்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 200க்கும் மேற்பட்ட கவிதைகள் மற்றும் பிற இலக்கியப் படைப்புகள் ஆனது காப்புரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப் பட்டுள்ளது.
வடகிழக்கு சபையின் (NEC) 72வது முழு அளவிலான கூட்டம் ஆனது திரிபுராவின் அகர்தலா நகரில், 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு இரண்டாவது முறையாக நடத்தப் பட்டது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் B.லோகூர் ஐக்கிய நாடுகள் சபையின் உள் நீதிமன்றச் சபையின் தலைவராக 2028 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வரைக்கும் நியமிக்கப் பட்டுள்ளார்.