அமெரிக்க நாட்டிவின் ஜார்ஜியா மாகாண டெக் கல்வி நிறுவனத்தினைச் சேர்ந்த கணிதப் பேராசிரியரான அலெக்சாண்டர் டன், 2024 ஆம் ஆண்டிற்கான சாஸ்த்ரா இராமானுஜன் விருதைப் பெற்றுள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான V.இராம சுப்ரமணியனை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அவர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான ஸ்ரீராம் கிருஷ்ணந என்பவரை செயற்கை நுண்ணறிவிற்கான மூத்த கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார்.
இந்திய அணியானது மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற 10 வயதிற்கு உட்பட்டோருக்கான முதல் மகளிர் ஆசியக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் வங்காள தேச அணியினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.
இந்திய இணை சினிமா என்ற இயக்கத்தின் ஒரு முன்னோடியான மூத்தத் திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனேகல் காலமானார்.
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனையான டாக்டர். தீபா மாலியின் நினைவுக் குறிப்பு ஆனது, ‘BRING IT ON: The Incredible Story of My Life’ என்ற பெயரில் வெளியிடப் பட்டுள்ளது.