TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 26 , 2024 27 days 96 0
  • 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களைக் கொண்டு வந்திருந்தாலும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரையில் பயிலும் அனைத்து குழந்தையினையும் தேர்ச்சி பெறச் செய்யும் நடைமுறை தொடரும்.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் திறன் பேசிகள், வரைப் பட்டிகைகள், கைக் கடிகாரங்கள் மற்றும் அணியக்கூடிய சாதனப் பொருட்களுக்கான அடுத்தத் தலைமுறைத் தொழில் நுட்பம் சார்ந்த Amoled திரைகளை உருவாக்குவதற்கு ஓர் ஆராய்ச்சி மையத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் மற்றும் எய்ம்ஸ் போன்ற சில முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் அரசுப் பள்ளி மாணவர்களின் இளங்கலை (UG) படிப்பிற்கான முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்க உள்ளது.
  • மத்தியப் பிரதேச மாநிலமானது, அதன் செழுமையான பாரம்பரியம், வனவிலங்குகள் மற்றும் கண் கவர் நிலப்பரப்புகளைச் சிறப்பித்துக் காட்டும் வகையில் வால் ஸ்ட்ரீட் இதழால் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவியச் சிறப்புப் பெற்ற இடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்புத் துறை அமைச்சகமானது 2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கான அணி வகுப்புக் காட்சி வாகனங்களின் கருத்துருவாக, “Swarnim Bharat: Virasat aur Vikas”  (பொன் மயமான இந்தியா : பாரம்பரியம் மற்றும் மேம்பாடு) என்பதை அறிவித்துள்ளது.
  • இந்தூரில் உள்ள தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையம் ஆனது நாட்டின் முதல் சுழிய அளவிலான கழிவு வெளியேற்றம் கொண்ட ஒரு விமான நிலையமாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • OpenAI ஆனது Sora எனப்படுகின்ற அதன் ஒளிப்படக் காட்சி உருவாக்க மாதிரியினை அறிமுகப் படுத்தியுள்ளதோடு உரை, படம் மற்றும் ஒளிப்படம் போன்ற உள்ளீடுகளை பெற்று புதிய ஒளிப்படக் காட்சியினை வெளியீடாக உருவாக்கும் வகையில் அது நன்கு வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • புது டெல்லியில் இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CBCI) நடத்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார்.
    • இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இது போன்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
  • கூகுள் நிறுவனமானது, சமீபத்தில் வில்லோ என்ற குவாண்டம் சில்லினை வெளியிட்டு உள்ளதோடு அதன் முந்தைய சில்லுகளில் உள்ள பிழை உருவாக்க வாய்ப்புகளை இது குறைத்துள்ளது.
    • வில்லோ ஆனது இன்றைய அதிவேக மீத்திறன் கணினிகள் 10 செப்டில்லியன் ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் ஒரு கணக்கீட்டை ஐந்து நிமிடங்களுக்குள் செய்து விடும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்