TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 28 , 2024 25 days 76 0
  • தமிழகத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்காக எனத் தொடங்கப்பட்ட கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்குக் கூடுதலாக 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
    • 2024-25 ஆம் நிதியாண்டில், இந்தத் திட்டத்திற்காக 3,500 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு பயனாளிக்கும் 3,50,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
  • தமிழகத்திற்கானச் சுற்றுலாப் பயணிகளின் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) வருகை 2020 ஆம் ஆண்டில் 14.18 கோடியாக இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் 28.71 கோடியாக உயர்ந்துள்ளது.
  • தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) கீழ், ஹோம் ஆஃப் செஸ் எனப்படுகின்ற சதுரங்கப் பயிற்சி அகாடமி நிறுவப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • சமீபத்தில் இந்தியத் தேசிய லோக் தால் (INLD) கட்சித் தலைவரும், ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்.
  • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமானது (EPFO), அதன் உறுப்பினர்கள் 2025 ஆம் ஆண்டு முதல் தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரங்களில் இருந்து நேரடியாக பணம் (50%) எடுத்தல் மற்றும் காப்பீட்டுக் கோரிக்கைகளை பெற வழி வகை செய்துள்ளது.
  • NLC இந்தியா லிமிடெட் நிறுவனமானது, உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப் பட்டு உள்ள மிகை மாறுநிலை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தினை விட அதிகபட்ச நிலையில் செயல்படும் 1,980 மெகாவாட் திறன் கொண்ட அதன் முதல் கதம்பூர் அனல் மின் நிலையம் (GTPP) ஆனது அதன் வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் பாரீசில் உள்ள லூவ்ரே என்ற அருங்காட்சியகம் போன்று யுக யுஜீன் பாரத் என்ற புதியதொரு தேசிய அருங்காட்சியகத்தினை உருவாக்குவதற்காக என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
    • இந்த அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டால், இது உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாக இருக்கும்.
  • டாடா எஃகு நிறுவனம் ஆனது, தனது நோமுண்டி இரும்புச் சுரங்கத்தில், இந்தியாவில் முதல் முறையாக அனைத்து மகளிர் பணி நேரத்தினை (shift) அறிமுகப் படுத்தி வரலாறு படைத்துள்ளது.
  • ஊபர் நிறுவனம் ஆனது, மகளிர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்காக மற்றும் என்று  பிரத்தியேகமாக ‘Moto Women’ என்ற சோதனைத் திட்டத்தினை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • திபெத்திய நாட்காட்டியில் அதன் புத்தாண்டைக் குறிக்கும் வகையிலான லடாக்கி லோசர் கொண்டாட்டம் ஆனது லடாக் முழுவதும் மிகுந்த ஒரு உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது.
  • பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 17 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்