TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 30 , 2024 23 days 73 0
  • அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி வாரியம் (AICTE) மற்றும் தேசிய துளிமக் கணினி திட்டம் (NQM) ஆகியவை இணைந்து இந்தியாவில் முதல் முறையாக துளிமக் கணினி தொழில்நுட்பங்களில் இளங்கலை இரண்டாம் நிலை கல்வித் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளன.
  • மத்திய அரசின் 'ஹர் கர் ஜல்' திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு முழுமையான குடிநீர் குழாய் சேவை விநியோகத்தினை வழங்கும் நாட்டின் ஐந்தாவது மாநிலமாக பஞ்சாப் மாறியுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்புப் படையின் தளபதியாகப் பணியாற்றிய பிரிகேடியர் அமிதாப் ஜா, சிரியாவின் கோலன் ஹைட்ஸ் பகுதியில் காலமானார்.
  • சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் கிரிக்கெட் குழுமத்தின் (MCC) கெளரவ கிரிக்கெட் உறுப்பினர் பதவியை ஏற்றுள்ளார்.
  • நிதித்துறையில் செயற்கை நுண்ணறிவின் (AI) நெறிமுறை சார்ந்த மற்றும் பொறுப்பு மிக்க ஏற்பிற்கான ஒரு கட்டமைப்பினை உருவாக்குவதற்காக வேண்டி டாக்டர் புஷ்பக் பட்டாச்சார்யா தலைமையின் கீழ் எட்டு பேர் கொண்ட குழுவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
  • மஹாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் உள்ள மன்சார் நகரத்தில் 44வது தேசிய நெடுஞ்சாலையில் (NH-44) உயிரி சார் கரிக்கீல் (பிட்டுமின்) கொண்டு போடப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய நெடுஞ்சாலையானது திறக்கப் பட்டுள்ளது.
  • மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆனது விமான நிலையங்களில் உணவு மற்றும் பானங்கள் அதிக விலைக்கு விற்கபடுவதைத் தடுப்பதற்காக வேண்டி, பயணிகளுக்காக 'உதான் யாத்ரி கஃபே' எனப்படுகின்ற ஒரு உணவு விற்பனை நிலையத்தினைத் தொடங்கும் முன்னெடுப்பினை மேற்கொண்டுள்ளது.
  • உத்தரகாண்டின் டேஹ்ராடூனில் உள்ள இந்திய வனவிலங்குக் கழகத்தில் (WII) மேம்படுத்தப் பட்ட பாஷ்மினா சான்றிதழ் வழங்கீட்டு மையம் மற்றும் அடுத்த தலைமுறை நுட்பம் சார்ந்த டிஎன்ஏ வரிசையாக்க மையமானது தொடங்கப் பட்டு உள்ளது.
  • இந்திய அரசானது காச நோயினை முடிவிற்குக் கொண்டுவரச் செய்வதற்கான முன்னேற்றத்தைத் தீவிரப்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 100 நாட்கள் அளவிலான காசநோய் ஒழிப்புப் பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 21 ஆம் தேதியன்று, கூடைப்பந்து விளையாட்டின் முக்கிய மேம்பாடு மற்றும் முக்கியத்துவத்தினைப் போற்றும் வகையில் உலகக் கூடைப்பந்து தினம் ஆனது அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்