தூத்துக்குடியில் உள்ள மீளவிட்டான் எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய டைடல் தொழில் துறைப் பூங்காவினைத் தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
தமிழ்நாடு மாநில அரசு ஆனது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற 75,028 மாணவியர்களுக்கு உதவும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தினை விரிவுபடுத்தியுள்ளது.
இந்திய இராணுவம் மற்றும் நேபாள இராணுவம் ஆகியவை இடையேயான 18வது சூர்ய கிரண் கூட்டு இராணுவப் பயிற்சியானது நேபாளத்தில் நடைபெற்று வருகிறது.
ஆந்திரப் பிரதேச மாநில அரசு ஆனது இரத சப்தமி விழாவினை அதன் அரசு விழாவாக அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் உள்ள விக்டோரியா சந்தைக் கட்டிடத்தில் இந்தியாவின் புவியியல் ஆய்வு மையத்தின் புவி அறிவியல் அருங்காட்சியகமானது திறக்கப் பட்டுள்ளது.
இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி, ஐந்து ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு அமெரிக்காவின் நியூயார்க்கில் மகளிர் உலக சதுரங்க விரைவுச் சுற்று சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் பட்டம் வென்றுள்ளார்.
மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ நிறுவனத்தின் உந்து விசை சோதனை வளாகத்தில் 100 குழாய் முனை பரப்பு விகிதத்தைக் கொண்ட அதன் CE20 கிரையோஜெனிக் எஞ்சினின் கடல் மட்ட வெப்பச் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டு உள்ளது.
மிகவும் பெரிய ஆய்வுக் கப்பல் உருவாக்கத் திட்டத்தின் இரண்டாவது கப்பலான INS நிர்தேஷாக், சமீபத்தில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
பெங்களூருக்கு அருகில் SWIFT (புத்தொழில் நிறுவனங்கள், பணியிடங்கள், புத்தாக்கம், நிதி மற்றும் தொழில்நுட்பம்) நகரத்தினை உருவாக்கும் திட்டத்தினை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.