BEML லிமிடெட் நிறுவனமானது, நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்படுத்தப் பட்ட வகையிலான BD475-2 எனப்படும் மண் வெட்டு மற்றும் இழுவை இயந்திரத்தினை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியப் பிரதமர், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் கூடிய தமிழ் கற்பித்தல் என்ற திட்டத்தினை ஃபிஜி நாட்டில் தொடங்கி வைத்துள்ளார்.
லடாக்கில் 14,300 அடி உயரத்தில் பாயும் பாங்காங் சோ ஏரியின் கரையில் அமைக்கப் பட்டுள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா அவர்களின் சிலையினை இந்திய இராணுவம் திறந்து வைத்துள்ளது.
மும்பையினைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயன் (17) ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரங்களை ஏறிய இளம் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
முகமூடி அணிந்த நடன முறைகள் மூலம் புத்தாண்டிற்கான அமைதி மற்றும் பெரும் செழுமையைக் கொண்டாடும் சிக்கிமின் காகியேட் நடன விழா ஆனது காங்டாக் நகரில் உள்ள சுக்லகாங் அரண்மனையில் நடைபெற்றது.
தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜெஜு ஏர் நிறுவனத்தின் விமானம் ஆனது ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 181 பேரில் 179 பேர் உயிரிழந்தனர்.
இந்திய இராணுவம் ஆனது, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்துடன் உடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் மேம்பாடு மற்றும் ஏற்பினை விரைவுபடுத்துவதற்காக வேண்டி பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு தொழில்துறை காப்பக மையத்தினை (IAAIIC) நிறுவியுள்ளது.
மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, ஓர் அதிர்வு அலை அடிப்படையிலான ஊசி இல்லாத ஒரு மருந்துப் பீச்சுக்குழாயினை உருவாக்கியுள்ளது என்ற நிலையில் இது தோலுக்கு மிகக் குறைவான சேதம் மற்றும் குறைவான நோய்த் தொற்று அபாயத்துடன் வலியற்ற மற்றும் பாதுகாப்பான மருந்து உட்செலுத்துதலை உறுதி செய்கிறது.
18வது யானைகள் மற்றும் சுற்றுலா விழாக்கள் ஆனது நேபாளத்தின் சௌராஹா எனுமிடத்தில் நடைபெற்றது.
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆனது, 2024 ஆம் ஆண்டில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் சாராத நுழைவு இசைவுச் சீட்டுகளை வழங்கியுள்ளது என்பதோடு இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த மைல் கல்லை எட்டியுள்ளதைக் குறிக்கிறது.