ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் ‘குறள் வாரம்’ (திருக்குறள் வாரம்) ஆகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
வனவிலங்கு வளங்காப்பிற்கு என மகத்தானப் பங்களிப்பினை ஆற்றிய ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு, ஒரு புகழ்பெற்ற வனவிலங்கு உயிரியலாளரான மறைந்த AJT ஜான்சிங்கின் பெயரில் ஒரு விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரோ தனது 100வது ஏவுகலத்தின் ஏவுதலை, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளதையடுத்து குறிப்பிடத்தக்க சாதனையைப் படைக்க உள்ளது.
மகாராஷ்டிராவானது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட SSI மந்திர மந்த்ரா அறுவை சிகிச்சை எந்திர மனிதன் எனப்படுகின்ற தனது முதல் அறுவை சிகிச்சை எந்திர மனிதனைப் புனேவின் நோபல் மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அறிமுகப் படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற கிங் கோப்பை சர்வதேச பேட்மிண்டன் ஓபன் போட்டியில் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனையான லக்சயா சென் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.