TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 4 , 2025 18 days 115 0
  • அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் R.V.வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
  • நான்காம் ஆண்டு சென்னை மலர் கண்காட்சியானது செம்மொழிப் பூங்காவில் தொடங்கப் பட்டுள்ளது.
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் (MeitY) கூடுதல் செயலாளரான புவனேஷ் குமார், இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பொறுப்பேற்றுள்ளார்.
  • தேசியப் புலனாய்வு முகமை (NIA) ஆனது, 2024 ஆம் ஆண்டில் 25 வழக்குகளில் 68 குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதன் மூலம் 100% தண்டனை பெற்றுத் தந்த விகிதத்தை அடைந்துள்ளது.
  • கேரள அணியானது, கேரளாவில் நடைபெற்ற முதுநிலை தேசிய ஆடவர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் சண்டிகர் அணியினைத் தோற்கடித்து தங்களது முதல் பட்டத்தை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்