தமிழக மாநில அரசானது, ஃபெங்கல் புயலினை கடுமையான இயற்கைப் பேரிடராக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக அரசானது, கோயம்பத்தூர், ஈரோடடில் உள்ள சத்தியமங்கலம் மற்றும் நீலகிரியின் மிகவும் முக்கியப் பகுதிகளில் ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளால் (NSAID) உள்நாட்டுக் கழுகு இனத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
ஒடிசா அரசானது, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF) இழப்பீடு வழங்குவதற்கு ஏதுவாக டிசம்பர் மாதம் பெய்த பருவமழை சாராத மழைப் பொழிவினை இயற்கைப் பேரிடராக அறிவித்து உள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் NH-44 சாலையில் ரம்பன்-பனிஹால் பிரிவில் அமைந்துள்ள 2.35 கிலோ மீட்டர் நீளமுள்ள பெரும் உத்தி சார் ரீதியான பயன்பாடு மிக்க நான்கு வழிச் சாலையின் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியானது, இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளை உள்ளடக்கிய கிரிக்கெட் டெஸ்ட் போட்டித் தொடரைக் கைப்பற்றியயதையடுத்து, பார்டர் கவாஸ்கர் கோப்பையினை 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வென்றுள்ளது.