TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 9 , 2025 13 days 105 0
  • ஜம்மு மற்றும் காஷ்மீரின் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பினை மிக மேம்படுத்தும் வகையில், ஒரு புதிய ஜம்மு இரயில்வே கோட்டத்தினை (இந்தியாவின் 69வது) பிரதமர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
  • அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி சபையானது (AICTE), இந்தியாவினை செயற்கை நுண்ணறிவில் உலகளாவிய முதன்மைத்துவம் பெறச் செய்வதற்காக என்று 2025 ஆம் ஆண்டை "செயற்கை நுண்ணறிவு ஆண்டாக" நியமித்துள்ளது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் முதன் முறை ஆக நடைபெற உள்ளன.
  • மத்திய உள்துறை அமைச்சர் புது டெல்லியில் தீவு மேம்பாட்டு முகமையின் (IDA) 7வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
  • புது டெல்லியின் பாரத மண்டபத்தில் கிராமீன் பாரத் மஹோத்சவ் 2025 நிகழ்வினை பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • 18வது பிரவாசி பாரதீய திவாஸ் மாநாடு ஆனது, ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் “Diaspora's Contribution to a Viksit Bharat” என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்று வருகிறது.
  • 82வது வருடாந்திர கோல்டன் குளோப் விருது விழாவானது அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ் எனுமிடத்தில் உள்ள பெவர்லி ஹில்டன் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்