TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 12 , 2025 3 days 35 0
  • தமிழக சட்டமன்றம் ஆனது, 2025 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கல்வி ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளைப் பேணுவதற்கான நடவடிக்கைகள்) வரைவு விதிமுறைகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மிகவும் வலியுறுத்தும் விதமாக முன் வைக்கப்பட்ட ஒரு அரசு தீர்மானத்தினை "ஒருமனதாக" நிறைவேற்றியுள்ளது.
  • தமிழ்நாடு அரசானது, கோயம்புத்தூரில் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) என்ற ஒரு முறையில் சுமார் 2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் செயற்கை நுண்ணறிவு (AI) மையத்தினை நிறுவ உள்ளது.
  • வன ஆக்கிரமிப்புகள், சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டும் நடவடிக்கைகள், வேட்டையாடுதல் மற்றும் வனப்பகுதிகளுக்குள் அங்கீகரிக்கப்படாத நுழைவைத் தடுப்பதற்காக கர்நாடக வனத்துறையானது 'கருடாக்சி' எனப்படும் இயங்கலை வழி முதல் தகவல் அறிக்கை பதிவு (FIR) அமைப்பினைத் தொடங்கியுள்ளது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் அருகே தேசிய அனல் மின் கழகத்தின் (NTPC) பசுமை ஆற்றல் உற்பத்தி லிமிடெட் எனப்படுகின்ற இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • தாலிபன் ஆட்சியுடனான முதன்முதல் உயர் மட்ட இருதரப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, துபாயில் (ஐக்கிய அரபு அமீரகம்) இந்திய வெளியுறவுச் செயலாளர் ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்காலிக வெளியுறவு அமைச்சரைச் சந்தித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்