கல்வி நிறுவன வளாகங்களுக்கு வருகை தரும் அனைத்துப் பார்வையாளர்களையும் கண்காணிக்கவும், நிகழ்நேரக் கண்காணிப்பு அமைப்புகளை நிறுவவும் மற்றும் பார்வையாளர்களின் மேலாண்மை நடைமுறையினை உருவாக்குவதற்குமான புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசலில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிறுவனத்தினை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த ஆண்டு காவல்துறையின் இரண்டாம் நிலைக் காவலர்கள், முதல் நிலைக் காவலர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் காவல் துறையின் சிறப்பு துணை ஆய்வாளர்கள் பதவி நிலையில் உள்ள மொத்தம் 3,000 காவல்துறையினர், தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் பதக்கங்களைப் பெற உள்ளனர்.
தேவஜித் சைகியா மற்றும் பிரப்தேஜ் சிங் பாட்டியா ஆகியோர் முறையே இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (BCCI) செயலாளராகவும் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.