TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 16 , 2025 6 days 48 0
  • கல்வி நிறுவன வளாகங்களுக்கு வருகை தரும் அனைத்துப் பார்வையாளர்களையும் கண்காணிக்கவும், நிகழ்நேரக் கண்காணிப்பு அமைப்புகளை நிறுவவும் மற்றும் பார்வையாளர்களின் மேலாண்மை நடைமுறையினை உருவாக்குவதற்குமான புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  • சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசலில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிறுவனத்தினை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
  • இந்த ஆண்டு காவல்துறையின் இரண்டாம் நிலைக் காவலர்கள், முதல் நிலைக் காவலர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் காவல் துறையின் சிறப்பு துணை ஆய்வாளர்கள் பதவி  நிலையில் உள்ள மொத்தம் 3,000 காவல்துறையினர், தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் பதக்கங்களைப் பெற உள்ளனர்.
  • தேவஜித் சைகியா மற்றும் பிரப்தேஜ் சிங் பாட்டியா ஆகியோர் முறையே இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (BCCI) செயலாளராகவும் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்