TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 18 , 2025 4 days 48 0
  • இந்தியக் கடற்படைக்கான இரண்டாவது பல்நோக்குக் கப்பலான INS உத்கர்ஷ் என்ற கப்பல் சென்னைக்கு அருகிலுள்ள காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • ஆந்திரப் பிரதேச அரசு ஆனது, இந்தியாவின் முதல் தனியார் குறைக்கடத்தி உற்பத்தி மையத்தினை அமைப்பதற்காக என இண்டிசிப் செமிகண்டக்டர் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் ஜப்பான் இணை நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
  • 6 கிலோ மீட்டர் வரம்பிலான தொலைவிற்குள் உள்வரும் இணை/கூட்டு ஆளில்லா வான்வழி வாகனங்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப் பட்ட பார்கவாஸ்த்ரா என்ற உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் குறு எறிகணை அமைப்பை இந்தியா மிகவும் வெற்றிகரமாக ஓடிசாவின் கோபால்பூரின் பரிசோதித்து உள்ளது.
  • காங்கிரஸ் கட்சியானது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் நினைவாகப் பெயரிடப்பட்ட, புது டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள இந்திரா பவன் எனப்படும் புதிய காங்கிரஸ் தலைமையகத்தினைத் திறந்து வைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்