TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 19 , 2025 3 days 29 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூன்றாவது ஏவுதளத்தினை (TLP) நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை தன் ஒப்புதலை அளித்துள்ளது.
  • அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்மிருதி மந்தனா குறைந்த (70) பந்துகளில் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
  • இந்திய இராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து 'டெவில் ஸ்ட்ரைக்' என்ற கூட்டுப் பயிற்சியினை மேற்கொண்டன.
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது, உலகிலேயே அதிகக் குதிரைத் திறன் (1200HP) கொண்ட ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இரயில் எஞ்சினை உருவாக்கியுள்ளது.
  • இந்தியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தங்களது கலாச்சாரம், சுற்றுலா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்புகளைக் கொண்டாடுவதற்காக வேண்டி 2026 ஆம் ஆண்டினை 'இரட்டை ஆண்டாக' அறிவித்துள்ளன.
  • இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, Chess.com நடத்திய இயர்லி டைட்டில் தியூஸ்டே வீக்லி பிளிட்ஸ் போட்டியில் உலகின் முன்னணிச் சதுரங்க வீரர் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ள ஃபேபியானோ கருவானா ஆகியோரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
  • பல்வேறு பதவித் தரவரிசைகளைச் சேர்ந்த 1,025 பணியாளர்களைக் கொண்ட இரண்டு புதிய படைப்பிரிவுகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) ஒரு மாபெரும் விரிவாக்கத்திற்கு உள்துறை அமைச்சகம் (MHA) ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்திய இராணுவம் தனது 77வது இராணுவத் தினத்தை மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள பாம்பே இன்ஜினியர்ஸ் குரூப் மற்றும் சென்டர் அணிவகுப்பு மைதானத்தில் கொண்டாடியது.
    • டெல்லிக்குப் பதிலாக வேறொரு இடத்தில் இராணுவ தின அணிவகுப்பு நடத்தப் படுவது இது மூன்றாவது முறையாகும்.
  • சர்ச்சைக்குரிய குறுகிய காலப் பங்கு விற்பனை நடைமுறைகளை வெளிக்கொண்டு வந்த  அமெரிக்க நாட்டின் ஹிண்டன்பர்க் நிறுவனமானது அதன் செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்