நேபாளத்தில் சுமார் 900 மெகாவாட் அளவு திறன் கொண்ட மேல் மட்ட கர்னாலி நீர்மின் நிலையத்தினை மேம்படுத்துவதற்காக வேண்டி இந்தியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் லிமிடெட் (IREDA) ஆனது , நேபாள மின்சார ஆணையத்துடன் (NEA) ஒரு கூட்டு துணிகர முன்னெடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
தகவல் தொலைதொடர்பு மேம்பாட்டு மையம் ஆனது, "அலைக்கற்றைப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான அகலப்பட்டை வரிசை அலைக்கற்றை-உணர்வி ASIC-சில்லு" உருவாக்கத்திற்காக வேண்டி ஜம்முவின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்து மண்டியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டு சர்வதேச உள்நாட்டு மற்றும் ஒப்பந்த ஜவுளி வர்த்தக கண்காட்சியில் இந்திய அரங்கம் திறக்கப் பட்டுள்ளது.
உலகின் முதல் 52x52x52 அளவிலான 'மகாமிர்துஞ்சய யந்திரம்' ஆனது உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் உள்ள ஜுன்சி ஹவேலிஸ் என்னுமிடத்தில் உள்ள தபோவன் ஆசிரமத்தில் நிறுவப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நெகிழிப் பயன்பாடு இல்லாத மகா கும்ப மேளாவிற்காக நெகிழிப் பைகள் மற்றும் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருட்களின் பயன்பாட்டினைக் குறைப்பதற்காக "ஒரு தட்டு, ஒரு பை" பிரச்சாரம் தொடங்கப் பட்டு உள்ளது.
2025 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு கொள்கைக்கான பல்வேறு பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் பணிக்காக 16 பேர் கொண்ட ஒரு குழுவை அமைப்பதாக மகாராஷ்டிரா அறிவித்துள்ளது.
அசாம் மாநில காவல்துறைத் தலைவர் ஞானேந்திர பிரதாப் சிங் மத்திய சேமக் காவல் படையின் (CRPF) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.