TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 26 , 2025 2 days 47 0
  • கீழடியில் ஒரு புதிய திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கை கொண்ட சோழ புரத்தில் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
  • அரிட்டாபட்டி பல்லுயிர்ப் பெருக்கத் தளத்திற்கு மிகவும் அருகில் உள்ள தமிழ்நாட்டின் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தினை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • நாங்குநேரி, திசையன்விளை மற்றும் சாத்தான் குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மழை மறைவுப் பகுதிகளில் 15,000 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையிலான தாமிரபரணி – கருமேனியாறு- நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்ட துவக்கத்தினைத் தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
  • 2025 ஆம் ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்திற்கான கருத்துரு, 'சுவர்ணிம் பாரத் - விராசத் ஔர் விகாஸ்' (பொன் மயமான இந்தியா- பாரம்பரியம் மற்றும் மேம்பாடு) என்பதாகும்.
  • இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ 2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவிற்கான தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார் என்ற நிலையில் இது இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான அரசு முறை உறவுகளின் 75வது ஆண்டு நிறைவில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
  • இந்திய உயர் ஆணையம் ஆனது, இலங்கையில் உள்ள யாழ்ப்பாணக் கலாச்சார மையத்தினை "சிறந்தத் தமிழ் கவிஞரும் தத்துவஞானியுமான திருவள்ளுவரை நன்கு கௌரவிக்கும் விதமாக" 'திருவள்ளுவர் கலாச்சார மையம்' என்று மறுபெயரிடுவதாக அறிவித்துள்ளது.
  • மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள கர்பஞ்ச்கோட் மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு இந்தியாவின் முதல் வானியல் ஆய்வகம் ஆனது திறக்கப் பட்டுள்ளது.
  • உஷா வான்ஸ், அவரது கணவர் J.D.வான்ஸ் அமெரிக்காவின் 50வது துணை அதிபராகப் பதவியேற்றதையடுத்து, முதலாவது இந்திய-அமெரிக்க மற்றும் இந்து மதத்தினைச் சேர்ந்த இரண்டாவது குடிமகள் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • தேசியப் புயல் தயார்நிலை திட்டத்தின் கீழான இந்தியாவின் முதலாவது முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட பேரிடர் முன் எச்சரிக்கை வழங்கீட்டு அமைப்பான 'KaWaCHaM' என்ற நெருக்கடி மற்றும் இடர் மேலாண்மை அமைப்பினை கேரள அரசு அறிமுகப் படுத்தி யுள்ளது.
  • மத்திய அரசானது, தற்போது சுமார் 605 ஆக உள்ள புவிசார் குறியீடுகளை 2030 ஆம் ஆண்டிற்குள் 10,000 புவிசார் குறியீடுகளைப் (GI) பெறுவதை இலக்காக நிர்ணயித்து உள்ளது.
  • ஜேனட் பெட்ரோ நாசா நிறுவனத்தின் தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப் பட்டுள்ளார் என்பதையடுத்து, இந்த நிறுவனத்திற்குத் தலைமை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையினை அவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்