TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 27 , 2025 28 days 90 0
  • புதுச்சேரியில் பிறந்த தவில் வித்துவான் P. தட்சணாமூர்த்தியும், 2025 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுகளைப் பெறுபவர்களில் ஒருவர் ஆவார்.
  • 1939 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் மொழியைப் பாதுகாப்பதற்காக வேண்டி தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த நடராஜன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவு சின்னத்தினை சென்னையில் மூலக்கொத்தளம் என்னுமிடத்தில் தமிழக முதல்வர் திறந்து வைத்து உள்ளார்.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆனது, குஜராத்தின் ஜாம்நகரில் உலகின் மிகப் பெரியத் தரவு மையத்தினைக் கட்டமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது.
  • அமெரிக்காவில் மத்திய வங்கி எண்ணிம நாணயத்தினை (CBDC) உருவாக்குவதையும் வெளியிடுவதையும் தடை செய்யும் ஒரு செயலாக்க உத்தரவில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டுள்ளார்.
  • மத்தியப் பிரதேச அமைச்சரவையானது, அந்த மாநிலத்தில் உள்ள 17 சமயச் சிறப்பு பெற்ற நகரங்களில் மதுபானத்திற்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
  • அமெரிக்காவில் பிறப்புரிமை சார்ந்த தன்னிச்சையான குடியுரிமையினை ரத்து செய்யும் செயலாக்க உத்தரவினை "அரசியலமைப்புக்கு விரோதமானது" என்று  கூறி அதனை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்கச் செய்யுமாறு அதன் கூட்டாட்சி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
  • பஞ்சாப் கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங், சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்தக் கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் இரண்டு முறை நடப்பு சாம்பியன் பட்டம் பெற்ற பெலாரசின் அரினா சபலென்காவை வீழ்த்தி அமெரிக்காவின் மேடிசன் கீஸ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை வென்று உள்ளார்.
  • இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் (IWAI) ஆனது, தற்போது உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் அதன் ஆறாவது பிராந்திய அலுவலகத்தினை நிறுவ உள்ளது.
    • தற்போது இது கௌஹாத்தி (அசாம்), பாட்னா (பீகார்), கொச்சி (கேரளா), புவனேஸ்வர் (ஒடிசா) மற்றும் கொல்கத்தா (மேற்கு வங்காளம்) ஆகிய இடங்களில் ஐந்து பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்