TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 28 , 2025 27 days 73 0
  • தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையானது, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்ததைத் தொடர்ந்து, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தினை (SIWU) பதிவு செய்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதியன்று, ஆந்திரப் பிரதேசம் உட்பட தெற்குத் தீபகற்ப இந்தியப் பகுதியில் இருந்து வடகிழக்கு பருவக்காற்று விலகியதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
  • மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இரண்டு மீனவக் கிராமங்களில் 39 இடங்களில் செயற்கைப் பவளப்பாறைகளை நிறுவுவதற்கு மாநில மீன்வளத் துறை திட்டமிட்டுள்ளது.
  • இந்தியாவின் முதன்முதல் வகையான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் மாபெரும் "புத்தாக்க வளாகம்" ஆனது மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.
  • லடாக்கில் உள்ள ஷியோக் மற்றும் நுப்ரா ஆகிய பள்ளத்தாக்குகளுக்கு இடையேயான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையில் ஷியோக் நதியின் குறுக்கே முன்னதாகவே கட்டமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட இரண்டு புதிய பெய்லி பாலங்களை இந்திய இராணுவம் திறந்துள்ளது.
  • வக்ஃப் திருத்த மசோதா மீதான பாராளுமன்றக் கூட்டு குழு (JPC) ஆனது, அதன் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட 14 திருத்தங்களை உள்ளடக்கிய ஒருவரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஈர நிலங்கள் குறித்த ராம்சர் உடன்படிக்கையின் கீழ் அங்கீகாரம் பெற்ற ஈர நில நகரங்களின் உலகளாவியப் பட்டியலில் இந்தூர் (மத்தியப் பிரதேசம்) மற்றும் உதய்பூர் (ராஜஸ்தான்) ஆகியவை இந்தியாவின் முதல் இரண்டு நகரங்களாக அதில் அங்கீகாரம் பெற்றுள்ளன.
  • இந்தியக் கிராண்ட்மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் (தமிழ்நாட்டின் ஈரோட்டினைச் சேர்ந்தவர்), மலேசியாவில் நடைபெற்ற 9வது ஜோகூர் சர்வதேச ஓபன் செஸ் சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தனது மகத்தான பங்கேற்பினை வெளிப்படுத்தி ள்ளார்.
  • இத்தாலியின் ஜானிக் சின்னர் ஜெர்மனியின் அலெக்ஸ்சாண்டர் வெர்வ் என்பவரை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் ஷிப் பட்டத்தினையும், ஒட்டு மொத்தமாக 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினையும் வென்றுள்ளார்.
  • தூய்மை எரிசக்திக்கு முறையான மற்றும் உள்ளடக்கிய வகையிலான ஒரு பெரும் மாற்றத்திற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும், அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காகவும் ஜனவரி 26 ஆம் தேதியன்று சர்வதேச தூய்மை எரிசக்தி தினம் ஆனது அனுசரிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்