ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அமிதவ் கோஷ் ‘Wild Fictions’ எனப்படும் தனது மிகச் சமீபத்திய புத்தகத்தினை வெளியிட்டுள்ளார்.
மதிப்புமிக்க 2025 ஆம் ஆண்டு FIDE சதுரங்க உலகக் கோப்பைப் போட்டியை இந்தியா நடத்த உள்ளது.
2025 ஆம் ஆண்டு புது டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சி ஆனது, கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியத் தேசியப் புத்தக அறக்கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நிதியியல் மற்றும் புதுமை மிக்க பொருளாதார மாதிரிகள் குறித்து விவாதிப்பதற்காக குஜராத் மாநில அரசானது முதலாவது சர்வதேச ஒலிம்பிக் ஆராய்ச்சி மாநாட்டினை ஏற்பாடு செய்ய உள்ளது.
நிதி மோசடியை எதிர்த்துப் போராடுவதற்காக வேண்டி வங்கிகளானது பரிவர்த்தனை சார்ந்த அனைத்து அழைப்புகளுக்கும் '1600xx' என்ற எண் தொடரையும், விளம்பரம் சார்ந்த அழைப்புகளுக்கு '140xx' என்ற ஒரு எண் தொடரையும் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.